திருவனந்தபுரம்:கிங்ஃபிஷர் விமானத்தில் குண்டுவைத்த வழக்கில் புலனாய்வுக்குழு விசாரணைச்செய்த வாலிபர் தூக்கில் தொங்கி மரணமடைந்த நிலையில் காணப்பட்டார்.
வலியரத்துறை என்ற இடத்தைச் சார்ந்த சுனில் லாரன்ஸ்(வயது 26) என்ற வாலிபர்தான் தற்கொலைச் செய்தவர். இவர் கிங்ஃபிஷர் விமானத்தில் துப்புரவுத் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்தார்.
சுனில் லாரன்ஸின் அறையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட கடிதத்தில், "நான் போலீஸாரிடம் பொய் கூறவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. எனது மரணத்திற்கு எவரும் காரணமில்லை. முதல் முதலாக போலீஸ் ஸ்டேசன் செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. போலீஸ் விசாரணைச் செய்ததால் எனது வெளிநாட்டு பயணம் தடைப்பட்டுவிட்டது. எனது மரணத்தின் காரணமாக எவரையும் தொந்தரவுச் செய்யவேண்டாம்". என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சுனில் ஒருவருட ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் கிங்ஃபிஷர் விமானத்தில் வேலைப்பார்த்து வந்தார். இவரது தந்தை லாரன்ஸ் மரணித்து சில மாதங்களே ஆகியுள்ளன. சுனில் வெடிக்குண்டு வழக்கில் நிரபராதி என்றும், சுனில் வேலைக்கு வந்த நேரம் குறித்து தவறான தகவலை தந்ததாலேயே கூடுதலாக விசாரணைச் செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "கிங்ஃபிஷர் விமானத்தில் வெடிக்குண்டு:போலீஸ் விசாரணைச்செய்த வாலிபர் தற்கொலை"
கருத்துரையிடுக