
நேற்று முன்தினம் கத்தர தூதரக அதிகாரியான முஹம்மது யஃகூப் அல் மதாதியை டென்வருக்கு செல்லும் விமானத்தில் சூவை தீப்பற்ற வைத்து குண்டுவெடிப்பு நடத்த முயற்சித்ததாக கருதி பாதுகாப்பு அதிகாரிகள் கைதுச்செய்தனர்.
இச்சம்பவம் விளையாட்டுத்தனமானது என விசாரணையில் தெரியவந்தது. உயர்ந்த தூதரக அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிகாரிகளுக்கு கட்டுப்பாடுகள் உள்ளது.
இதனைத் தொடர்ந்து கத்தர் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் முஹம்மது அல் மதாதி அமெரிக்காவை விட்டு வெளியேறினார்.
விமானத்தில் முஹம்மது அல் மதாதி கிளப்பிய பீதியால் விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. எஃப்.பி.ஐ அதிகாரிகள் நீண்ட நேரம் மதாதியை விசாரணைச் செய்தனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "விமானத்தில் புகைப்பிடித்து வெடிக்குண்டு பீதியை கிளப்பிய கத்தர் தூதரக அதிகாரி அமெரிக்காவை விட்டு வெளியேறினார்"
கருத்துரையிடுக