இந்திய தேசத்தின் ரகசியங்களை பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் விற்று காசு சம்பாதித்தவர்களின் பட்டியலில் தற்பொழுது மூத்த தூதரக அதிகாரியும் இடம்பெற்றுள்ளார்.
பாகிஸ்தானில் ’ரா’ என்ற ரிசர்ச் அண்ட் அனாலிசிஸின் பொறுப்பு வகித்த வி.ஆர்.கே சர்மாவிடமிருந்து தகவல்களைப் பெற்று இஸ்லாமாபாத்தில் இந்திய ஹைக்கமிஷனில் இரண்டாவது நிலை செயலாளராக பணியாற்றிய 53 வயது பெண்மணி ஐ.எஸ்.ஐக்கு அளித்துள்ளார்.
இந்தியநாட்டின் ரகசிய உளவுத்துறையான ‘ரா’ வின் ஏஜண்டுகள் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் எட்டப்பன் பணியைச் செய்வது இது முதல் தடவையல்ல. ’ரா’ வின் ஏஜண்டாக இருக்கும் பொழுது அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ வுக்கு உளவுத் தகவல்களை வழங்கிய ரபீந்தர் சிங்கின் செயல் மிகவும் கேவலத்தை ஏற்படுத்திய சம்பவமாகும். ரபீந்தர் சிங் கண்காணிப்பிலிருக்கும் பொழுதுதான் அமெரிக்காவிற்கு தப்பிச் சென்று அந்நாட்டிடம் அபயம் தேடினார்.
முன்னர் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய ரபீந்தர் சிங் தென்கிழக்கு ஆசியாவில் ’ரா’வின் மூத்த அதிகாரியாக பணியாற்றியவராவார். ’ரா’ தன்னை கண்காணிக்கிறது என்பதை மோப்பம் பிடித்த உடனேயே ரபீந்தர் சிங் நேபாளம் வழியாக அமெரிக்காவிற்கு தப்பி ஓடினார். 2007 ஆம் ஆண்டு சீன உளவுத்துறையைச் சார்ந்த பெண்மணியுடனான தொடர்பைத் தொடர்ந்து கொழும்புவில் ’ரா’ ஏஜண்டாகயிருந்த ரவி நாயர் தாயகத்திற்கு திரும்ப அழைக்கப்பட்டார்.
ரபீந்தர் சிங்கின் சம்பவத்திற்கு பிறகு நம்பிக்கைத் துரோகத்தில் ஈடுபட்டு தலைமறைவான ‘ரா’ ஏஜண்டுகளின் பட்டியலை பிரதமர் மன்மோகன்சிங் கோரியிருந்தார்.
1960 களில் ‘ரா’ உருவாக்கப்பட்ட பின்னர் தேசத்துரோக நடவடிக்கைகளில் ஈடுபட்ட 9 பேரின் பட்டியல் பிரதமரிடம் அளிக்கப்பட்டது. ’ரா’வில் மிக உயர் பதவியிலிருந்த அதிகாரியின் செயலாளராக பணியாற்றி லண்டனில் தலைமறைவான நபரின் பெயரும் அப்பட்டியலில் இடம் பெற்றிருந்தது. ஐ.எஸ்.ஐக்கு உளவு தகவல்களை வழங்கியதாக குற்றஞ்சாட்டி முன்னாள் ராணுவவீரரான சுதாம்சு சுதாகர் கைதுச் செய்யப்பட்டது சமீபத்தில்தான். ஜம்மு கஷ்மீரிலும், செகந்திராபாத்திலும் இந்திய ராணுவத்தினரைக் குறித்தும் ஏவுகணைகளைக் குறித்தும் தகவல்களை ஐ.எஸ்.ஐக்கு அளிப்பதற்காக காட்மாண்டுவிற்கு செல்லும் வழியில்தான் சுதாகர் கைதுச் செய்யப்பட்டார்.
மலேகான் குண்டுவெடிப்பில் மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படையால்(ATS) கைதுச் செய்யப்பட்ட தயானந்த் பாண்டே அளித்த வாக்குமூலத்தில், மோகன் பாகவத் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் ஐ.எஸ்.ஐயிடமிருந்து பணம் வாங்கிய தகவல்களை அளித்திருந்தார். அன்று ஆர்.எஸ்.எஸ்ஸின் பொதுச்செயலாளராகயிருந்த மோகன் பாகவத்தை அவ்வமைப்பிலிருந்து வெளியேற்றுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. (தற்பொழுது தலைவராகிவிட்டார் என்பது வேறு விஷயம்).
இந்திய தேசத்தின் ரகசியங்களை அந்நிய நாடுகளுக்கு விற்றதற்காக கைதுச் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோரும் உயர் ஜாதியினரும், சங்க்பரிவார் தொடர்பு உடையவர்களும் என்பது மறுக்கவியலாத உண்மை.
ஐ.பி யிலும், ‘ரா’ விலும் பார்ப்பணர்களின் ஆதிக்கத்தை குறித்து முன்னாள் மஹாராஷ்ட்ரா ஐ.ஜியான எஸ்.எம். முஷ்ரிஃப் தான் எழுதிய 'கார்கரேயைக் கொன்றது யார்' என்ற நூலில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.
1985 ஆம் ஆண்டு கைதுச் செய்யப்பட்ட ராமசொரூபம் குமார் நாராயாணன், 1994 ஆம் ஆண்டு கைதுச்செய்யப்பட்ட ’ரா’ அதிகாரி உண்ணிகிருஷ்ணன், வெப்பன்ஸ் அண்ட் எக்யூப்மெண்ட் டிபார்ட்மெண்ட்டில் (Weapons and equipment department) பணியாற்றவே ரகசியங்களை களவாடிய பிரிகேடியர் டிகோல், டாக்டர் நெருக்கூர் என தேசத்தை விற்று காசு சம்பாதித்தவர்களின் பட்டியல் நீளுகிறது.
2006 ஆம் ஆண்டு ஜூன்-ஜூலை மாதங்களில் கைதுச் செய்யப்பட்ட ’ரா’ அதிகாரி முகேஷ் ஷைனி, ஓய்வுப் பெற்ற பிரிகேடியர் உஜ்ஜல் தாஸ் குப்தா, சிவ்சங்கர் போல் ஆகியோர் அமெரிக்க தூதரக பெண்மணி ரோஸன்னா மிஞ்சுவிற்கு தேச ரகசியங்களை விற்றவர்கள்.
இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு அடிமை சேவகம் புரிந்த கும்பலின் வாரிசுகளால் சும்மாதான் இருக்கவியலுமா? இந்தத் தேசத் துரோகிகளின் இழிவான முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுவது ஒவ்வொரு தேசப்பற்றாளர் மீது கடமையாகும்.
விமர்சகன்
1 கருத்துகள்: on "குமார் நாராயணன் முதல் மாதுரி குப்தா வரை தொடரும் பார்ப்பன, சங்க்பரிவார கும்பல்களின் தேசத் துரோகங்கள்"
varuththappada vendiya vishayam.
கருத்துரையிடுக