புதுடெல்லி:உருது மொழி இந்தியாவில் பல இடங்களில் பேசப்பட்டாலும், அந்த மொழியின் முக்கிய கலைஞர்கள் டெல்லியில் தான் வாழ்கிறார்கள் என்று உரிமை கொண்டாடியுள்ளார் டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித்.
டெல்லி பல்கலைகழகத்தின் உருதுப் பிரிவின் பொன் விழாவில் பங்கேற்று பேசிய அவர், தங்கள் அரசு உருது மொழியை வளர்பதில் அதிக ஆர்வம் காட்டியுள்ளதாகவும், அரசின் அதிகார்வப்பூர்வ மொழிகளில் உருது மொழியும் ஒன்று என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் பேசுகையில், இந்தியாவில் உருது மொழி முஸ்லீம்களால் மற்றும் பேசப்படவில்லை மாறாக மற்ற மதத்தினரும் உருது மொழில் பேசுகின்றனர் என்றார்.
ராஜ்யசபா துணைத் தலைவர் ரஹ்மான் கான், டெல்லி உணவுத்துறை அமைச்சர் ஹாரூன் யுஸுப், டெல்லி குழந்தைகள் நலத்துறை அமைச்சர் கிரன் வாலியா உட்பட ஏராளமான தலைவர்கள் இவ்விழாவில் கலந்துக் கொண்டனர்.
டெல்லி பல்கலைகழகத்தில் உருது பிரிவு 1959ல் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
source:Siasat
0 கருத்துகள்: on "பொன் விழாவைக் கொண்டாடியது டெல்லி பல்கலைக்கழகத்தின் உருது பிரிவு"
கருத்துரையிடுக