ஐ.நா:முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோவுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அன்றைய பாக்.அதிபர் பர்வேஸ் முஷாரஃப் புறக்கணித்தார் என்றும், உரிய பாதுகாப்பு வழங்குவதில் வீழ்ச்சி ஏற்பட்டதாகவும் பெனாசிர் கொலையைக் குறித்து விசாரணை மேற்கொண்ட ஐ.நா குழு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பெனாசிர் கொலைவழக்கில் பாக்.உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ தலையிட்டது உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களைக் கொண்ட இந்த அறிக்கையில் கொலையைச் செய்தது யார் என்பதுக் குறித்து எந்தவொரு தகவலும் இல்லை.
பெனாசிர் பூட்டோவுக்கு பல கொலை மிரட்டல்கள் வந்த பிறகும் அதனை கவனத்தில் கொள்ளவோ உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வோ முஷாரஃப் முயற்சி எடுக்கவில்லை. அரசு முயற்சித்திருந்தால் ஒருவேளை கொலையை தடுத்திருக்கலாம்.
கடந்த 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி ராவல்பிண்டியில் தேர்தல் பேரணியின் போது பெனாசிர் பூட்டோ துப்பாக்கியால் சுடப்பட்டு கொலைச் செய்யப்பட்டார். தொடர்ந்து குண்டுவெடிப்பும் நிகழ்ந்தது. பெனாசிர் சுடப்பட்டவுடனேயே அவரை மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்ல உபயோகித்த கார் குண்டுவெடிப்பில் சேதமானது ஆகும். புல்லட் ஃப்ரூப் கார் அருகில் நின்றபொழுதும் அதனை உபயோகப்படுத்தாது ஆச்சரியமளிப்பதாக ஐ.நா விசாரணை கமிஷன் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
ராவல்பிண்டி மருத்துவமனையில் பெனாசிரின் உடலை போஸ்ட்மார்ட்டம் நடத்தாமலிருக்க மூத்த போலீஸ் அதிகாரி உத்தரவிட்டிருந்தார். பெனாசிருக்கு உரிய பாதுகாப்பை ஏற்பாடு செய்வதில் பஞ்சாப் போலீசும், ராவல்பிண்டி போலீசும் காலதாமதம் செய்ததாக ஐ.நா புலனாய்வு விசாரணை குழு தலைவர் ஹரால்டோ முனோஸ் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். பெனாசிர் கொல்லப்பட்ட மறு தினம் பாக்.அரசு நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பைக் குறித்தும் ஐ.நா விசாரணைக்குழு தமது சந்தேகத்தை வெளிப்படுத்துகிறது.
பைத்துல்லா மஹ்சூதின் தலைமையிலான பாக்.தாலிபான் தான் பெனாசிரின் கொலைக்குப் பின்னணியில் செயல்பட்டதாக பாக்.அரசின் அறிக்கை ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று என ஐ.நா குழு நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெனாசிர் கொலை வழக்கில் ஐ.எஸ்.ஐ தலையிட்டுள்ளது என்பதற்கான ஆதாரமும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெனாசிரின் கொலை மர்மமானது எனக்கூறிய பாக்.அரசிடமிருந்து சில கேள்விகளுக்கு பதில் இல்லை. பெனாசிர் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டாரா அல்லது குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டாரா? ஏன் பெனாசிரின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்யவில்லை? ஆதாரங்களை அழிக்கப்படுமுன் ஏன் சேகரிக்கவில்லை? உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலில்லை.
அதுமட்டுமல்ல பெனாசிர் கொலைக் குறித்த புலன் விசாரணையை பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் நடத்திவிட்டு நாடுமுழுவதும் கொலைக்குறித்த விசாரணையை மேற்க்கொள்ளாததும் சந்தேகத்திற்குரியதாக கமிஷன் சுட்டிக்காட்டியுள்ளது.
2009 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி சிலி நாட்டின் ஐ.நா தூதர் ஹரால்டோ முனாஸின் தலைமையில் சுதந்திர புலனாய்வு விசாரணைக்கமிசன் செயல்படத் துவங்கியது. கடந்த டிசம்பர் மாதம் கமிஷனுக்கு வழங்கப்பட்ட கால அளவு முடிந்த போதிலும், மார்ச் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
ஆட்சியாளர்கள்-ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 250 பேர்களிடமிருந்து வாக்குமூலங்களை சேகரித்த ஐ.நா விசாரணைக்குழு முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் காண்டலிஸா ரைஸ், ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாய், சவூதி அரேபியா அரசு ஆகியோரிடமிருந்தும் வாக்குமூலம் பெறவேண்டும் என்ற பாக்.அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "பெனாசிர் பூட்டோ கொலை:முஷாரஃப் உரிய பாதுகாப்பு நடவடிக்கையை மேற்க்கொள்ளவில்லை- ஐ.நா அறிக்கை"
கருத்துரையிடுக