
மாரடைப்பால் மரணமடைந்துள்ள இஸ்ரார் அஹ்மத் 1932 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி இந்தியாவின் ஹரியானா மாநிலத்திலிலுள்ள ஹிஸாரில் பிறந்தார்.
1954 ஆம் ஆண்டு மருத்துவ பட்டத்தை லாகூரிலிலுள்ள கிங் எட்வர்டு பல்கலைக்கழகத்தில் பெற்ற இஸ்ரார் 1965 ஆம் ஆண்டு இஸ்லாமிய கல்விக்கான உயர்படிப்புப் பட்டத்தை கராச்சி பல்கலைக்கழகத்தில் பெற்றார். மாணவர் பருவத்தில் மெளலானா செய்யத் அபுல் அஃலா மவ்தூதி அவர்களின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட இஸ்ரார் மாணவர் இயக்கத்தில் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார்.
பாகிஸ்தான் பிரிவினைக்கு பின்னர் ஜமாஅத்தே இஸ்லாமியின் தேர்தல் அரசியல் கொள்கை பிடிக்காமல் 1956 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதிலிருந்து வெளியேறினார். பின்னர் தன்ஸீம்-இ-இஸ்லாமி என்ற இயக்கத்தை 1956 ஆம் ஆண்டு துவக்கினார்.
சொற்பொழிவுகள், விவாதங்களில் புகழ்பெற்றவர் இஸ்ரார் அஹ்மத். நீண்டகாலமாக இதய நோய் பாதிக்கப்பட்டிருந்த இஸ்ரார் அஹ்மத் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி மதியம் மரணமடைந்தார். (இன்னாலில்லாஹி...) அவருடைய உடல் அடக்கம் லாகூரில் நடைபெறும்.
0 கருத்துகள்: on "பிரபல இஸ்லாமிய அறிஞர் இஸ்ரார் அஹ்மத் மரணம்"
கருத்துரையிடுக