பிரேசிலியா:ஈரான் விவகாரத்தில் சமாதானத்தின் அடிப்படையிலான, பேச்சுவார்த்தை மூலம் பரிகாரம் காணவேண்டும் என இந்தியாவும், பிரேசிலும்,தென்னாப்பிரிக்காவும் வலியுறுத்தின.
பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் நடைபெற்ற இந்தியா,பிரேசில், தென்னாப்பிரிக்கா(IBSA) ஆகிய நாடுகளின் உச்சிமாநாட்டில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
சர்ச்சைக்குரிய விவகாரங்களில் ஐ.நா மற்றும் சர்வதேச அணுசக்திக்கழகத்தின் உத்தரவுகளை பேண ஈரான் தயாராக வேண்டுமெனவும் இம்மாநாடு கேட்டுக்கொண்டது. ஈரானுக்கு அணுசோதனை நடத்துவதற்கு உரிமை உண்டு எனக்கூறிய இந்திய பிரதமர் மன்மோகன்சிங் கூற்றை அங்கீகரித்தது உச்சிமாநாடு. ஆனால் அது ஆபத்தை விளைவிக்க கூடியதாக மாறக்கூடாது எனவும் சர்வதேச சட்டங்களுக்குட்பட்டு செயல்படவேண்டுமெனவும் மன்மோகன்சிங் மேலும் குறிப்பிட்டார்.
பயங்கரவாதத்தைக் கண்டித்த உச்சிமாநாடு ஆப்கானிஸ்தானில் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழலுக்கு பரிகாரம் காண சர்வதேச நாடுகள் முன்வர கோரிகை விடுத்தது. பிப்ரவரியில் இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டதை பிரேசிலும், தென்னாப்ரிக்காவும் கண்டித்தன.
தீவிரவாதச் செயல்களை இல்லாமலாக்க இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இருநாடுகளும் ஆதரவு தெரிவித்தன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஈரான் அணுசக்தி விவகாரத்தில் தூதரக நடவடிக்கைகள் மூலம் பரிகாரம் ஏற்படவேண்டும்: பிரேசில் உச்சிமாநாடு"
கருத்துரையிடுக