தெஹ்ரான்:ஈரான் மேல் உலக நாடுகளின் அழுத்தம் எங்களை மேலும் மேலும் வலுவடையச் செய்வதாக ஈரானிய அதிபர் அஹ்மத் நிஜாத் கடந்த சனிக்கிழமையன்று தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஈரானிய வர்தகத்தடைகளுக்கான முயற்சிகளை தொடர்ந்து, அஹ்மத்நிஜாத் கூறுகையில், என்ன தடைகள் வந்தாலும் எங்கள் இஸ்லாமிய குடியரசு அதை தகர்த்தெரிந்து, அணுஆயுதத் திட்டத்தின் குறிக்கோள்களை நிறைவேற்றியே தீரும் என்றார்.
"நீங்கள் உலக சக்திகள், உங்கள் கழுத்தை நீங்களே மாய்த்து கொள்ளக்கூடும். மேலும் கீழும் தாவுவதும், அறிக்கை மேல் அறிக்கை விடுவதும், மிரட்டல்கள் விடுவதும் மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றுவதும், ஈரானை மேன்மேலும் வலிமையடையச் செய்யும்" என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,"உலக நாடுகளை கேட்டுக் கொண்டும், அவர்கள் தர மறுத்த அணுஆயுத எரிப்பொருள்களை ஈரான் தானாகவே தயாரித்துள்ளது என்றார். என்.பி.டி என்ற உலக சட்டதின்படி, உலக நாடுகள் தெஹ்ரானிற்கு எரிப்பொருள்களை தர வேண்டும் என்றும், ஆனால் நீங்கள் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை" என்று அவர் குற்றஞ்சாட்டினார்.
"நாங்களே அதை செய்துக் காட்டுவோம் என்று சொன்னபோது, அவர்கள் நம்மைக் கண்டுச் சிரித்தார்கள், ஆனால் நம் திறமைசாலிகள் அதையும் செய்து காட்டினார்கள்." என்று பெருமையுடன் நிஜாத் தெரிவித்தார்.
மற்றொரு பேட்டியில், அஹ்மத் நிஜாத் அமெரிக்காவின் புதிய பேச்சுவார்தைக்காண அழைப்பை நிராகரித்து கூறியதாவது, "கடந்த மாதத்தின் பேச்சுவார்தைக்காண ஒபாமாவின் அழைப்பு அழகான 'மூன்று நான்கு வார்த்தைகளால்' அலங்கரிக்கப்ப்ட்டு இருந்ததாகவும், ஆனால் அவைகள் செயல்களில் ஒன்றுமே இல்லை" என்று குற்றஞ்சாட்டினார்.
இதனிடையே, ஈரானின் அணுஆயுத தலைவர் அலி அக்பர் ஷேக் கூறுகையில், ஈரானில் இன்னும் இரண்டு யுரேனிய நிலையத்தை கட்டுவதற்காண திட்டங்களை அதிபரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
source:Times of india
0 கருத்துகள்: on "உலகநாடுகளின் அழுத்தம் எங்களை மென்மேலும் வலுவடையச் செய்கிறது: அஹ்மத் நிஜாத்"
கருத்துரையிடுக