அபுதாபி:பொது இடத்தில் பகிரங்கமாக முத்தம் கொடுத்ததிற்கு தண்டனை விதிக்கப்பட்ட பிரிட்டன் தம்பதியினர் அளித்த மேல்முறையீட்டு மனுவை துபாய் நீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது.
பிரிட்டன் தம்பதிகளான அய்மன் நஜஃபி மற்றும் ஷார்லட் ஆடம்ஸ் ஆகியோர் துபாயைச் சேர்ந்த பெண்மணியொருவர் அளித்த புகாரின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இவர்கள் கைதுச் செய்யப்பட்டிருந்தனர். நீதிமன்றம் இவர்களுக்கு 200 பவுண்ட் அபாராதமும், ஒரு மாத சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.
இதற்கெதிராகத்தான் அத்தம்பதியினர் மேல்முறையீடுச் செய்தனர். அதனை நீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது. இத்தீர்ப்பையும் எதிர்த்து மீண்டும் மேல்முறையீடுச் செய்யப் போவதாக தம்பதியினர் தெரிவித்தனர்.
வளைகுடா பகுதியில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வாசஸ்தலமாக விளங்கும் துபாயில் வெளிநாட்டுப் பயணிகளின் அருவருக்கத்தக்க நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் சமீபத்தில்தான் சட்டத்தை கடுமையாக்கினர். முன்பு இச்சம்பவங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "பகிரங்க முத்தம்:பிரிட்டன் தம்பதிகளின் அப்பீல் துபாய் நீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது"
கருத்துரையிடுக