6 ஏப்., 2010

அமெரிக்க பயங்கரவாதத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் வீடியோ

ஏப்ரல் 5ஆம் தேதி விக்கிலீக் என்ற இணையதளம் வெளியிட்டுள்ள வீடியோ உலக முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு பாக்தாதின் புறநகர் பகுதியில் போராளிகள் எனக்குற்றஞ்சாட்டி அமெரிக்க கொலைவெறி ராணுவப்படையினர் இரண்டு ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அப்பாவி மக்களை கொடூரமாக சுட்டுக் கொல்லும் காட்சிகளும், காயமடைந்த பத்திரிகையாளரையும், இரண்டு சிறுவர்களையும் அவசர சிகிட்சைக்காக வாகனம் ஒன்றில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்ல முயலும் பொழுது அவர்களையும் கொடூரமாக சுட்டு வீழ்த்தும் காட்சிகளும் இவ்வீடியோவில் அடங்கியுள்ளன.


இந்தக் கொடூரக் குற்றத்தை அமெரிக்க ராணுவம் தற்ப்பொழுது ஒப்புக் கொண்டுள்ளது. இந்த வீடியோவில் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜுலை மாதம் பாக்தாதின் புறநகர் பகுதியில் 8 பேர்கள் நடந்துச் சென்றுக் கொண்டிருக்கும் காட்சி துவங்குகிறது. அமெரிக்க அப்பாச்சி(Apache) ஹெலிகாப்டரின் பைலட்டிற்கு சாலையில் நடந்துச் சென்றுக் கொண்டிருப்பவர்கள் போராளிகள் என்றும் அவர்களிடம் கிரேனேடும், ஏ.கே.47 துப்பாக்கிகளும் இருப்பதாக தகவல் வருகிறது.

இதனைத் தொடர்ந்து பைலட் சாதாரணமாகக் கேட்கிறார் அவர்களை சுடவா? என்று. அனுமதிக் கிடைத்ததும் சுட ஆரம்பிக்கிறார். காயமடைந்தவர்கள் தவழ்ந்து செல்ல அவர்களையும் குறிவைத்து சுடுகிறார்கள். தாக்குதலில் காயமுற்ற நபரையும் இரண்டு சிறுவர்களையும் ஒரு மினி பஸ்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அவசரச் சிகிட்சைக்கு கொண்டுச் செல்ல முயலுகின்றனர் சிலர்.

ஆனால் படுபாவிகள் மீண்டும் சுட ஆரம்பிக்கின்றனர். ஒரு பைலட் கூறுகிறார், "அனைவரையும் சுட்டுத்தள்ளு கம் ஆன் ஃபைர்" எனக்கூற இன்னொரு பைலட் சிரித்துக் கொண்டே, "அங்கே பார் செத்த பிணங்கள் நன்றாக சுட்டேன்" என கூறுகிறார்.

இரண்டு குழந்தைகள் காயமடைந்ததை பார்த்து ஒரு பைலட் கூறுகிறார், "குழந்தைகளை இந்த மோதலில் ஈடுபடுத்தியது அவர்களது தவறு" என்று.
பெண்டகன் இந்த வீடியோவைக் குறித்து இதுவரை எந்த பதிலும் தரவில்லை. 2007 ஆம் ஆண்டு இத்தாக்குதல் நடந்த நேரத்தில் அமெரிக்க ராணுவம் கூறியது என்னவெனில். "ஹெலிகாப்டர்கள் போராளிகள் மீது தாக்குதல் நடத்தியது" என.

ராய்டர்ஸ் நிறுவனம் தகவல் அறியும் சட்டப்படி இதனை கோரியது. ஆனால் இது பகிரங்கமாக வெளியிடப்படவில்லை. விக்கிலீக் கூறுகையில், அமெரிக்க ராணுவம் அப்பாவிகளை சுட்டுக் கொன்றதை இந்த வீடியோ மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்கா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளது.

அமெரிக்கா தனது அதிகாரப் பலத்தின் மூலம் உலக நாடுகளை அடக்கி ஆள நினைக்கிறது. இந்த நினைப்பில் எப்பொழுது மண் விழப் போகிறதோ?
செய்தி:mirror.co.uk இலிருந்து.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அமெரிக்க பயங்கரவாதத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் வீடியோ"

கருத்துரையிடுக