11 ஏப்., 2010

நக்ஸல்களை ஒடுக்க அளிக்கப்பட்ட பணத்தை மாநிலங்கள் முறைகேடாக பயன்படுத்தியதாக சி.ஐ.ஜி அறிக்கை

புதுடெல்லி:நக்ஸல்களை ஒடுக்க மத்திய அரசு அளித்த பணத்தை மாநிலங்கள் தவறான முறையில் பயன்படுத்தியதாக கம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட் ஜெனரலின் (comptroller and audit genearal) அறிக்கை தெரிவிக்கிறது.

தண்டாவாடாவில் 76 துணை ராணுவப்படையினர் நக்ஸலைட்டுகளால் கொல்லப்பட்ட சூழலில் வெளியான சி.ஐ.ஜியின் அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நக்ஸல்கள் ஆதிக்கம் உள்ள மாநிலங்களில் மாநில காவல்துறையை நவீனப்படுத்துவதற்கான திட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட பணத்தை தவறான முறையில் உபயோகிக்கப்பட்டுள்ளது அல்லது பயன் தரத்தக்க வகையில் செலவழிக்கப்படவில்லை. நக்ஸலைட்டுகளை எதிர்க்கொள்ள போதிய பயிற்சியை அளிப்பது, ஆயுதங்களும், தொழில்நுட்ப கருவிகளும், வாகனங்களும் வாங்குவது தொடர்பாகத்தான் பணம் அளிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு கஷ்மீர் மற்றும் எட்டு வடகிழக்கு மாநிலங்களுக்கு 100 சதவீதமும், இதர மாநிலங்களுக்கு 75 சதவீத நிதியும் மத்திய அரசு அனுமதியளிக்கிறது. இதர 25 சதவீதத்தை மாநிலங்கள் பங்களிக்கவேண்டும்.

2009-10 ஆண்டில் மத்திய அரசு 820 கோடி ரூபாய் ஒதுக்கியிருந்தது. 2000 முதல் 2007 வரை கால அளவில் ஒதுக்கப்பட்ட தொகையின் அடிப்படையிலான திட்டத்தை பரிசோதித்த சி.ஐ.ஜி திட்டத்தின் துவக்கம் முதலே முறைகேடுகள் நடந்துள்ளதாக கண்டறிந்துள்ளது.

நிதி ஒதுக்குவதற்கு முன்பு மாநிலங்கள் திட்டங்களை தயார் செய்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கவேண்டும். பீஹார் மாநிலம் மிகவும் காலதாமதம்செய்து இவ்வறிக்கையினை சமர்ப்பித்துள்ளது. மேற்குவங்காளமோ இத்திட்டத்தைக் குறித்து போதிய விபரங்கள் இல்லாமலேயே சமர்ப்பித்துள்ளது. ஆந்திரபிரதேச மாநிலம் இத்திட்டத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட 32 கோடியை செலவழித்தபோதிலும் அது இத்திட்டத்தின் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களின் அடிப்படையில் அல்ல.

2000-2005 ஆண்டு கால அளவில் மேற்குவங்காள அரசு இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட மத்திய அரசின் நிதியில் பாதியை கைப்பற்றியுள்ளது. ஆனால் மாநில அரசின் பங்கை செலுத்தவில்லை. 2002-2007 ஆண்டு கால அளவில் ஆந்திரபிரதேச மாநிலம் 10சதவீத மாநில பங்கை மட்டுமே செலவழித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் 10 ஆயிரம் வாகனங்கள் வாங்க அனுமதியளிக்கப்பட்ட நிதியில் 2400 வாகனங்கள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளது. இதில் 20 கார்கள் அம்பாசிடர் கார்களாகும். திட்டப்படி 55 வாகனங்கள் வாங்க மட்டுமே மத்திய அரசின் அனுமதியுள்ளது. பெரும்பாலான மாநிலங்கள் காவல்துறைக்கு தேவையான கட்டிடங்களை கட்டவில்லை. இதனால் பாதுகாப்புக் குறித்து பீதியில் போலீசார் உள்ளனர்.

ஆந்திரபிரதேச மாநிலத்தில் 2007 ஆம் ஆண்டில் 53 சதவீத பணியாளர் குடியிருப்புகளும், 43 சதவீத அலுவலக கட்டிடங்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. பீஹாரில் 2006 ஆம் ஆண்டுதான் வெறும் ஆறு சதவீத கட்டிடங்களின் பணி பூர்த்தியானது. ஜார்க்கண்டில் இரண்டுகோடியை செலவிட்டு கண்ட்ரோல் ரூம்கள் நிர்மாணிக்கப்பட்ட பிறகும் உரிய பணியாளர்களை நியமிக்காததால் அவை செயல்பாடின்றி இருக்கின்றன.

காலாவதியான ஆயுதங்களைத்தான் பல இடங்களிலும் போலீஸ் பயன்படுத்துகிறது. பீஹாரில் வி.ஐ.பிக்களின் பாதுகாப்பிற்காக போலீசிற்கு அளித்த ஏ.கே.47 துப்பாக்கிகள் ஏற்கனவே உபயோகித்ததாகும். மேற்குவங்காளத்தில் நக்ஸல் பகுதிகளிலிலுள்ள போலீஸ் நிலையங்களில் நவீன துப்பாக்கிகள் வழங்கப்படவில்லை. இங்குள்ள தகவல் தொடர்பு நிலைமை பரிதாபகரமாக உள்ளது. 850 ரிமோட் ஸ்டேஷன் யூனிட்டுகள் வாங்கியதில் 425 யூனிட்டுகளும் போலீஸ் ஸ்டேசன்களிலேயே கிடக்கின்றன. ஆட்டோமெட்டிக் ஐடண்டிட்டி கட்டமைப்பு பல இடங்களிலுமில்லை.

மேற்குவங்காளத்தில் ஃபாரன்சிக் சயின்ஸ் லேபரேட்டரி கட்டமைப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதனால் ரிப்போர்ட் தயாரிக்க பல மாதங்கள் ஆகிறது. பீஹாரில் 10 சதவீத போலீஸாருக்கு மட்டுமே நக்ஸல்களை எதிர்க்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதர மாநிலங்களிலும் நக்ஸல்களை எதிர்க்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டுள்ள போலீஸாரின் எண்ணிக்கை குறைவு என்றும் அவை உரிய வேகத்தில் இல்லை என்றும் சி.ஐ.ஜியின் அறிக்கை கூறுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "நக்ஸல்களை ஒடுக்க அளிக்கப்பட்ட பணத்தை மாநிலங்கள் முறைகேடாக பயன்படுத்தியதாக சி.ஐ.ஜி அறிக்கை"

கருத்துரையிடுக