வாஷிங்டன்:அணுஆயுத குறைப்பு நடவடிக்கைகளில் பல நாடுகளும் ஈடுபடும் பொழுது அமெரிக்கா அணு ஆயுத தயாரிப்புகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
மிகவும் புதியதாக பெண்டகன் தயாரித்துக் கொண்டிருக்கும் ஏவுகணை உலகின் எந்தவொரு நாட்டையும் ஒரு மணிநேரத்தில் குறிவைத்து தாக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையாகும். prompt global strike weapons என்ற பெயர் இந்த ஏவுகணைக்கு சூட்டப்பட்டுள்ளது. இதனை வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிகை ஒரு ராணுவ அதிகாரியை மேற்க்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
பயங்கரவாத முகாம்களை குறிவைத்து அழிக்க புதிய தயாரிப்பு அத்தியாவசியமானது என அப்பத்திரிகை கூறுகிறது. அதேவேளையில் புதிய ஏவுகணை அணு ஆயுதப் போட்டியை அதிகரிக்கும் என ரஷ்யா கவலைத் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் ஏவுகணை அணுஆயுதம் தாக்குதலுக்கு பயன்படுத்தவும் இயலும். ஆனால் அமெரிக்க இதனை மறுக்கிறது. ரஷ்யாவுடன் செய்துக்கொண்ட ஒப்பந்தத்தை இது பாதிக்காது என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "சில மணிநேரங்களில் எந்த நாட்டையும் குறிவைக்கும் ஏவுகணையை தயாரிக்கிறது அமெரிக்கா"
கருத்துரையிடுக