சூடான் நாட்டின் அகோபா நகரில் உள்ள மருத்துவமனையில் எலும்புக்கூடாக காட்சியளிக்கும் தனது 2 வயது குழந்தையுடன் தாய். கடந்த 2 வருடங்களாக பருவமழை பொய்த்தது, பழங்குடியின மக்கள் மோதல் போன்றவற்றால் அங்கு கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சூடான் மக்களுக்கு உதவுவதற்காக ஐ.நா. சபையின் குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர். மேலும் பூமியில் அதிக பசிமிக்க பகுதியாக சூடானை ஐ.நா. சபை அறிவித்துள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த 46 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகளாக உள்ளனர் என்று சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
source:dinamani

0 கருத்துகள்: on "கோரத்தின் உச்சம்...!"
கருத்துரையிடுக