361 பயணிகளுடன் துபாயில் இருந்து கேரளாவிலுள்ள கொச்சியை நோக்கி பறந்து கொண்டிருந்த 'எமிரேட்ஸ்' விமானம் EK530 கோவா வான்வெளியின் மேல் பயணித்த போது, 'AIR POCKET' காரணமாக 20000அடி உயரத்தில் பறந்துக் கொண்டிருந்த விமானம் திடீரென்று பல ஆயிரம் அடி கீழ் நோக்கி அதாவது 1500அடி உயரம் வரை வீழ்ச்சியடைந்தது. ஆனால் அது அதிர்ஷ்ட வசமாக மீண்டும் வீழ்ச்சி குறைந்து பயணிக்க தொடங்கியது.இன்னும் சில வினாடிகள் தாமதித்து இருந்தால் அது தரையில் விழுந்து நொறுங்கி இருக்கும்.
திடீரென்று ஏற்பட்ட வீழ்ச்சியினால் அதிர்ச்சிக்குள்ளான பயணிகளை சாமர்த்தியமாக பாதுகாப்பான முறையில் அறிவுறுத்தி மேலும் விமானத்தை மீண்டும் கட்டுக்குள் வந்த விமானி உடனே விமான கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தந்து பயணிகள் இறங்கியதும் மருத்துவ உதவிக்குக் கேட்டுகொண்டார். அதன் பேரில் விமானம் தரையிறங்கியதும் பாதிக்கப்பட்ட இருபது பயணிகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. மற்ற அனைத்து பயணிகளும் பத்திரமாக கொண்டு வரப்பட்டனர்.
விமானம் கீழ் நோக்கி வேகமாக வீழ்ச்சி அடைந்ததால் பயணிகளில் ஓருசிலர் அங்கும் இங்குமாக வீசப்பட்டனர் என்றும் குழந்தைகள் முதியவர்கள் இருக்கையிலிருந்து வீச்ப்பட்டனர் என்றும் பயணிகள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக துபாய் மற்றும் இந்திய விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.விமானத்தைத் திறமையாக கையாண்டு தரையிறக்கிய விமானிகளின் சாதுரியத்தால் மிகப் பெரும் விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டது.
'AIR POCKET' என்று கூறப்படும் காற்றில் இருக்கும் அழுத்த இடைவெளியில் திடீரென அழுத்தம் அல்லது அடர்த்தியில் மாற்றம் ஏற்பட்டால் விமானம் நிலை தடுமாறி. எஞ்சின் கட்டுப்பாடு இழந்து, வெடித்துச் சிதறவும் வாய்ப்புள்ளது. மேலும் , கட்டுப்பாடு இழந்த விமானம் கீழ்நோக்கியும் தள்ளப்படும் வாய்ப்பு உள்ளது. இதைதான் ஆங்கிலத்தில் 'AIR POCKET' என்பார்கள்.
source:Timesofindia

0 கருத்துகள்: on "துபாயிலிருந்து கொச்சி சென்ற 'எமிரேட்ஸ்'விமானம் மிகப்பெரிய விபத்தில் இருந்து தப்பியது"
கருத்துரையிடுக