புதுடெல்லி:மலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடைய மஹாராஷ்ட்ரா தீவிரவாத தடுப்புப்படையினரால் கைதுச் செய்யப்பட்ட கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித் விரைவில் ராணுவத்திலிருந்து நீக்கப்படுவார் என கருதப்படுகிறது.
இவரை விரைவில் ராணுவத்திலிருந்து நீக்கவேண்டுமென்று லக்னோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ராணுவ நீதிமன்றம் சிபாரிசுச் செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கர்னல் புரோகித்திற்கெதிரான அறிக்கையை ராணுவ தலைமையகம் பரிசோதித்து வருகிறது. அதற்கு பிறகு இறுதித் தீர்மானத்திற்காக பாதுகாப்புத் துறைக்கு அனுப்பப்படும் என முக்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புரோகிதின் மலேகான் குண்டுவெடிப்பிலுள்ள தொடர்பு அரசியலுக்கு அப்பாற்பட்ட மதரீதியான வெறித்தனமாகும். இது இந்திய ராணுவத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாதத் தாக்குதலில் முதன் முதலில் ஒரு ராணுவ அதிகாரி கைதுச் செய்யப்படுவது இதுதான் முதல் தடவையாகும்.
முஸ்லிம்களை குறிவைத்து 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி மலேகான் குண்டுவெடிப்பு நடந்தேறியது. இதுத் தொடர்பாக கைதுச் செய்யப்பட்டவர் தான் புரோகித்.
இதன்மூலம் இந்திய ராணுவத்தில் வலதுசாரி ஹிந்துத்துவா தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது. ஓய்வுப் பெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய, சன்னியாசினி பிரக்யாசிங் தாக்கூர், தயானந்த் பாண்டே ஆகியோர் மலேகான் குண்டுவெடிப்புத் தொடர்பாக கைதுச் செய்யப்பட்டிருந்தனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "கர்னல் புரோகித் விரைவில் ராணுவத்திலிருந்து நீக்கப்படுவார்"
கருத்துரையிடுக