27 ஏப்., 2010

ஐபிஎல் புதிய ஆணையர் சிரயூ அமீன்

மும்பை:ஐபிஎல் லின் இடைக்கால ஆணையராக பரோடா கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும், பிசிசிஐ துணைத் தலைவர்களில் ஒருவருமான சிரயூ அமீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

லலித் மோடி சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அடுத்து அமீன் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஐபிஎல் நிர்வாகக்குழு கூட்டத்துக்குப் பின் பிசிசிஐ தலைவர் சஷாங் மனோகர் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அமீன் சிறந்த நிர்வாகி என்று பெயரெடுத்தவர். நிதி மற்றும் மார்க்கெட்டிங் துறையில் பல ஆண்டு காலம் அனுபவம் உள்ளவர்.

பரோடாவில் உள்ள அலிம்பிக் என்ற மருந்துப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை மேலாண்மை இயக்குநராகவும் அவர் பதவி வகித்து வருகிறார். 100 ஆண்டுகளுக்கு மேல் மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனம் ஆண்டுக்கு ரூ.1,200 கோடி அளவுக்கு லாபம் சம்பாதித்து வருவது குறிப்பிடத்தக்கது. நிர்வாகத்தில் நேர்மை மற்றும் திறமையானவர் என்று பெயரெடுத்தவர் சிரயூ அமீன். இளம் வயதில் சிறந்த கிரிக்கெட் வீரராகவும் அவர் விளங்கினார்.

ஐபிஎல் ஆணையராக தேர்ந்தெடுக்கப்பட்டபின் மும்பையில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

"பல்வேறு நிதி மோசடி குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள ஐபிஎல்லை தூய்மைப்படுத்தவும், போட்டிகளுக்கு புதுவடிவம் கொடுப்பதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். அடுத்த ஆண்டில் ஐபிஎல் புதுப்பொலிவு பெறும். இதற்கான நடவடிக்கைகள் இப்போதிருந்தே தொடங்கப்படும்.

குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு லலித் மோடிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர் அளிக்கும் பதிலைப் பரிசீலித்து நிர்வாகக்குழு அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கும். விளக்கம் தர அவருக்கு 15 நாள்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் இந்த விஷயம் குறித்து நான் கருத்துத் தெரிவிக்க முடியாது." என்றார் சிரயூ அமீன்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஐபிஎல் புதிய ஆணையர் சிரயூ அமீன்"

கருத்துரையிடுக