வாடிகன் சிட்டி:கத்தோலிக்க பாதிரியார்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் பலாத்கார குற்றச் சாட்டுக்களை செமிட்டிக் இனத்தவர்களுக்கெதிரான குரோதம் என ஒப்பீடுச் செய்த வாடிகன் கத்தோலிக்க பாதிரியாரின் கூற்றுக்கு யூத அமைப்புகளும், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களும் கடும் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்துள்ளனர்.
இந்த கூற்று ஒழுக்கரீதியாக தவறானது என அமெரிக்காவில் செயல்படும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் அமைப்புக் கூறியுள்ளது.
ஜெர்மனியில் செயல்படும் மத்திய யூத கமிட்டி கூறுகையில் இது அதிக பிரசங்கித்தனம் என்றது. ரோம் நகரில் செண்ட் பீட்டர்ஸ் சர்ச்சில் நடந்த புனித வெள்ளி நிகழ்ச்சியில்தான் வாடிகனின் உயர் பாதிரியார்கள் சபையின் ஆலோசகரான ரானியெரோ காண்டலாமெஸ்ஸா இந்த சர்ச்சைக்குரிய உரையை நிகழ்த்தினார்.
போப் ஆண்டவரின் முன்னிலையில் இவ்வுரை நிகழ்த்தப்பட்டது. தனது யூத நண்பர் ஒருவர் கடிதத்தை மேற்க்கோள்காட்டி காண்டலாமெஸ்ஸா இந்த உரையை நிகழ்த்தினார். சில நபர்கள் நடத்திய குற்றத்தின் பெயரால் சர்ச்சிற்கும், போப்பிற்குமெதிராக நடத்தும் திட்டமிட்ட தாக்குதல் செமிட்டிக் இனத்திற்கு எதிரான குரோதத்தை நினைவுப்படுத்துவதாக காண்டலாமெஸ்ஸா கூறினார்.
இந்த ஆண்டு ஏராளமான கத்தோலிக்க பாதிரியார்களுக்கெதிராக பாலியல்பாலத்கார குற்றச்சாட்டுகள் எழுந்தன. காண்டலாமெஸ்ஸாவின் கூற்று அதிகாரப் பூர்வமானதன்று என்றுக்கூறி வாடிகன் பிரச்சனையிலிருந்து தலைத்தப்ப முயன்றாலும், காண்டலாமெஸ்ஸாவின் உரையை வாடிகனின் அதிகாரப்பூர்வ ஏடான லோஸெர்வாதோர் ரொமானோவின் முதல் பக்கத்திலேயே பிரசுரிக்கப்பட்டுள்ளது.
ஏராளமான பாதிரியார்களுக்கெதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை வாடிகன் மூடி மறைத்ததாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்திருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "பாலியல் குற்றச்சாட்டு: வாடிகனின் கூற்றுக்கு கண்டன கணைகள்"
கருத்துரையிடுக