திருவனந்தபுரம் மன்மோகன் சிங் அரசு வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதில் மிகவும் கவனம் செலுத்தினாலும் அது அவ்வளவு எளிதல்ல என்று தலைமை தேர்தல் அதிகாரி நவின் சாவ்லா கூறுகிறார்.
இதுக் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், இது பற்றி கடந்த மாதம் அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாக கூறினார். வெளி நாடு வாழ் இந்தியர்கள் பல நாடுகளில் பல மாநிலத்தவர்கள் பரவியிருப்பதால் ஓட்டு இயந்திரத்தை பாதுகாப்புடன் எடுத்து சென்று எடுத்து வரவேண்டும் என்றும் கூறினார். மேலும் ஓட்டளிப்பவர்கள் குறைந்தபட்சம் அவர்களது தொகுதிகளில் தங்கியிருக்கும் கால அளவை மாற்ற வேண்டியது இருக்கும் என்றார்.
source:IANS

0 கருத்துகள்: on "வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவது எளிதல்ல: தலைமை தேர்தல் அதிகாரி நவீன் சாவ்லா"
கருத்துரையிடுக