புதுடெல்லி:இஷ்ரத் ஜஹான், ஜாவேத் குலாம் ஷேக் உள்ளிட்ட நான்கு பேர்கள் போலி என்கவுண்டரில்தான் கொல்லப்பட்டார்கள் என்பதைக் கண்டறிந்த ஜுடிசியல் மாஜிஸ்ட்ரேட் எஸ்.பி.தமாங்கிற்கெதிரான விசாரணைக்கு உத்தரவிட்ட குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ரத்துச் செய்தது.
இவ்வழக்கில் சி.பி.ஐ விசாரணக்கோரி இஷ்ரத் ஜஹானின் தாயார் ஸமீமா கவுஸர் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணையின் போது இம்மனுவில் தீர்ப்பு கூற டிவிஷன் பெஞ்ச ஏற்படுத்தவும், நீதிபதிகளான சுந்தரேசன் ரெட்டி, எஸ்.எஸ்.நிஜ்ஜர் ஆகியோரைக் கொண்ட சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிட்டது.
தமாங்கின் விசாரணை அறிக்கைக்கு எதிராக குஜராத் அரசு அளித்த மனுவையும் டிவிசன் பெஞ்ச் கவனத்தில் கொள்ளும். இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியை கொலைச் செய்ய முயன்ற லஷ்கரே-இ-தய்யிபா இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்பது குஜராத் அரசின் வாதம்.
ஆனால் இதனைக் குறித்து விசாரணைச் செய்ய நியமிக்கப்பட்ட மாஜிஸ்ட்ரேட் தமாங், என்கவுண்டர் போலி என்று கடந்த 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் ஏழாம் தேதி அறிக்கையை சமர்ப்பித்தார். போலி என்கவுண்டர் கொலைகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர் பரிந்துரைத்திருந்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "இஷ்ரத் ஜஹான் வழக்கு: நீதிபதி தமாங்கிற்கெதிரான விசாரணை உத்தரவை சுப்ரீம் கோர்ட் ரத்துச் செய்தது"
கருத்துரையிடுக