22 ஏப்., 2010

இலங்கையின் புதிய பிரதமராக ஜெயரத்னே

இலங்கையின் புதிய பிரதமராக ஜெயரத்னே புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

ஆளும் கட்சியின் மூத்த தலைவரும், அதிபர் ராஜபட்சவுக்கு நெருங்கியவருமான ஜெயரத்னே, தோட்டப் பயிர்த்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் அவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் புதிய நாடாளுமன்றம் வியாழக்கிழமை முதல் முறையாக கூடுகிறது. இந்நிலையில் ஆளுங்கட்சியில் ராஜபட்சவுக்கு அடுத்த மூத்த தலைவரான ஜெயரத்னே பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயரத்னே, ஆளுங்கட்சியில் நான்தான் மூத்த தலைவர். இதனால் என்னைத் தவிர யாரையும் பிரதமராகத் தேர்ந்தெடுக்க இயலாது என்று வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார்.
source:dinamani

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இலங்கையின் புதிய பிரதமராக ஜெயரத்னே"

கருத்துரையிடுக