பெங்களூர்:ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நடந்த பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு அருகே நடந்த குண்டுவெடிப்புகளுக்கு பின்னணியில் சூதாட்டக்காரர்களின் பங்குக் குறித்தும் போலீஸ் விசாரணை நடத்துகிறது.
சூதாட்டக் கும்பலின் பங்கைக் குறித்தும் இவ்வழக்கில் விசாரணை நடப்பதாக கர்நாடகா உள்துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா கூறினார்.
குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து பெங்களூரில் நடக்கவிருந்த இரண்டு ஐ.பி.எல் அரையிறுதி ஆட்டங்கள் மும்பைக்கு மாற்றப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஐ.பி.எல் அதிகாரிகளை தெளிவுப்படுத்துவதற்கு எல்லா முயற்சிகளும் நடத்தினாலும், அவர்களுடைய காரணங்களால் போட்டிகள் மும்பைக்கு மாற்றப்பட்டதாக ஆச்சார்யா தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி மும்பை இண்டியன்சும், ரோயல் சேலஞ்சர்சும் இடையிலான போட்டி துவங்குவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பாக ஸ்டேடியத்தின் கேட்டிற்கு அருகில் நடந்த 2 குண்டுவெடிப்புகளில் 17 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதேவேளையில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்களின் நோக்கம் நெரிசலை பயன்படுத்தி விபத்தை உருவாக்குவதுதான் என்ற சந்தேகமும் நிலவுவதாக பெங்களூர் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போட்டியைக்காண ஸ்டேடியத்தில் 40 ஆயிரம் பேர் வந்திருந்தனர். அமோனியம் நைட்ரேட்டும், பெட்ரோலியம் ஜெல்லியும், பேட்டரியும் டைமருடன் இணைக்கப்பட்ட வெடிக்குண்டுதான் குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பை நிகழ்த்தியது பயிற்சிப்பெற்ற தீவிரவாதிகள் அல்லர் என போலீஸ் கூறுகிறது.
இதற்கிடையே புனே ஜெர்மன் பேக்கரியில் நடைபெற்ற குண்டுவெடிப்பைக் குறித்து புலனாய்வுச் செய்யும் குழு தகவல்களை சேகரிக்க பெங்களூருக்கு வந்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பெங்களூர் குண்டுவெடிப்பு: சூதாட்டக்காரர்களின் பங்குக் குறித்து விசாரணை"
கருத்துரையிடுக