துபாய்:கடந்த ஈதுல் அழ்ஹா (தியாகப்பெருநாள்) தினத்தில் பாகிஸ்தானைச் சார்ந்த 4 வயது சிறுவன் மூஸா முக்தாரைக் கொலைச்செய்த ஐக்கிய அரபு அமீரக குடிமகனின் அப்பீல் மனுவை துபாயின் உச்சநீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது.
ராஷித் என்ற இவ்விளைஞர் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் முக்தாரை சித்திரவதைச் செய்து கொலைப்படுத்தியுள்ளார். இதனையடுத்து துபாய் நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்டது. அப்பீல் மனுவின் மீதான் விசாரணையின் போது எதிர்தரப்பு வழக்கறிஞர் குற்றவாளிக்கு மரணத்தண்டனைக்கு பதிலாக மனநோய் சிகிட்சைதான் தேவை என்றார். ஆனால் அவ்விளைஞரை பரிசோதித்ததில் அவருக்கு மனநோய் ஒன்றுமில்லை என்பது தெரியவந்ததால் நீதிமன்றம் அப்பீல் மனுவை தள்ளுபடிச் செய்தது.
வளைகுடா நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் மரணத்தண்டனை விதிப்பது அபூர்வமாகும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

1 கருத்துகள்: on "மரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞரின் அப்பீலை தள்ளுபடி செய்தது துபாய் நீதிமன்றம்"
4 வயதுப் பாலகனைக் கொன்ற பாவிக்கு மரணதண்டனை கொடுத்ததுதான் சரி. மீண்டும் அதை ஊர்ஜிதப்படுத்தியது மிக மிகச்சரியே.
பணத்திற்காக நீதியைக்கொள்ள முயலும் இப்படிப்பட்ட அயோக்கிய வக்கீல்களுக்கும் சேர்த்தே தண்டனை கொடுக்கவேண்டும். பொது இடங்களில் வைத்து பலநூரு கசைஅடிகளை போட்டால்... அடுத்தவன் அஞ்சுவான். நாடு நலம் பெரும்.
இதற்கு ‘ஷரியா’வில் வழியிருந்தால்... நீதிமன்றங்கள் கண்டிப்பாக இனி இதையும் செய்யவேண்டும்.
தெளிவான அன்புடன்,
gowsem@gmail.com
கருத்துரையிடுக