16 மே, 2010

லலித் மோடியின் 12 ஆயிரம் பக்க 'மெகா' விளக்க அறிக்கை

தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு 12 ஆயிரம் பக்கங்களில் விளக்கம் அளித்து மிரட்டியுள்ளார் லலித் மோடி. இதனை படித்து, எப்போது நடவடிக்கை எடுப்பது என பி.சி.சி.ஐ., குழம்பிப் போயுள்ளது.

ஊழல் புகார் காரணமாக ஐ.பி.எல். அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து லலித் மோடி 'சஸ்பெண்ட்' செய்யப் பட்டார். இவரிடம் விளக்கம் கேட்டு இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கு பதில் அளிக்கும்விதமாக 12 ஆயிரம் பக்கங்கள் கொண்ட விளக்க அறிக்கையை மோடி தயார் செய்தார். இதனை நான்கு காரில் வைத்து, மும்பையில் உள்ள பி.சி.சி.ஐ., அலுவலகத்தில் இவரது வக்கீல்கள் சமர்ப்பித்தனர். மொத்தம் 6 அட்டைப் பெட்டிகளில் கொண்டு வரப்பட்ட அறிக்கையை, பி.சி.சி.ஐ., தலைமை நிர்வாக அதிகாரி ரத்னாகர் ஷெட்டி பெற்றுக் கொண்டார்.

ஐ.பி.எல்., தொடருக்கான 'டிவி' மற்றும் இன்டர்நெட் ஒளிபரப்பு உரிமத்தில் லஞ்சம் பெற்றது உள்ளிட்ட தன் மீதான 5 குற்றச்சாட்டுகளுக்கு மோடி தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மோடியின் வக்கீல் மெஹமூத் அப்தி கூறுகையில், "பி.சி.சி.ஐ., 35 பக்கங்கள் கொண்ட விளக்க நோட்டீஸ் தான் அனுப்பியது. இதற்கு 9 முதல் 12 ஆயிரம் பக்கங்கள் கொண்ட பதில் அறிக்கையை கொடுத்துள்ளோம். அனைத்து புகாருக்கும் உரிய விளக்கம் தரப்பட்டுள்ளது. பி.சி.சி.ஐ. தலைவராக இருக்கும் சஷான்க் மனோகர் ஒரு பிரபல வக்கீல். ஒரு நிமிடத்துக்கு ஆயிரம் பக்கங் களை படிக்கும் பழக்கம் உடையவர். எனவே, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.பி.எல். தலைவராக மீண்டும் லலித் மோடியை நியமிக்க வேண்டும்". என்றார்.

இந்த 'மெகா' விளக்க அறிக்கையை படித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டு உள்ளது. இது பற்றி பி.சி.சி.ஐ. தலைவர் சஷான்க் மனோகர், துணை தலைவர்கள் அருண் ஜெட்லி, சிராயு அமின் ஆகியோர் அடங்கிய ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி, இறுதி முடிவு எடுக்கும்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "லலித் மோடியின் 12 ஆயிரம் பக்க 'மெகா' விளக்க அறிக்கை"

கருத்துரையிடுக