தாய்லாந்தில் ராணுவத்துக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தில் 23 பேர் கொல்லப்பட்டனர்; 140 பேர் காயமடைந்தனர். தலைநகர் பாங்காக், போர்க்களம் போல் காட்சியளிக்கிறது.
தாய்லாந்தில் பிரதமராக உள்ள அபிஜித் வெஜ்ஜாஜிவியா, தேர்தலில் முறைகேடு செய்து, ராணுவத்தின் உதவியுடன் வெற்றி பெற்றதாக, அரசுக்கு எதிரான குழு ஒன்று, கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறது.
பிரதமர் அபிஜித் பதவி விலக வலியுறுத்தி, சிவப்பு சட்டை அணிந்த ஏராளமான போராட்டக்காரர்கள், தலைநகர் பாங்காக்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கியமான இடங்களை இவர்கள் ஆக்கிரமிக்க முயற்சித்து வருகின்றனர். இவர்களை தடுக்கும் முயற்சியில் ராணுவம் முழுவீச்சில் களம் இறக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை மேலும் முன்னேற விடாமல், 3 ச.கி.மீ., பரப்பளவு பகுதிகள், ராணுவத்தினரால் சீல் வைக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் இரவில் இருந்து, இங்கு பெரிய அளவில் கலவரம் வெடித்தது. ராணுவ வீரர்களை குறிவைத்து போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இவர்களை தடுக்கும் வகையில் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பெரும் கலவரம் காரணமாக 23 பேர் கொல்லப்பட்டனர்; 140 பேர் காயமடைந்தனர்.
பாங்காக்கின் பெரும்பாலான பகுதிகள் போர்க்களம் போல் காட்சி அளிக்கின்றன. எங்கு பார்த்தாலும் துப்பாக்கி வெடிக்கும் சத்தமும், வெடிகுண்டுகள் வெடிக்கும் சத்தமும் கேட்கின்றன. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என்றும், கலவரம் கட்டுப் படுத்தப்பட்டுள்ளதாகவும் தாய்லாந்து ராணுவம் தெரிவித்துள்ளது. இருந்தாலும், முக்கிய வீதிகளில் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் கிடப்பதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்தில் நடக்கும் கலவரம் குறித்து ஐ.நா., பொதுச் செயலர் பான்-கீ-மூன் கவலை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,"இரு தரப்பினரும் வன்முறையை கைவிட்டு, உடனடியாக அமைதி பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும்" என்றார்.

0 கருத்துகள்: on "தாய்லாந்தில் ராணுவம், போராட்டக்காரர்கள் மோதல் 23 பேர் பலி"
கருத்துரையிடுக