16 மே, 2010

ஸ்ரீராமசேனாவை தடைச்செய்து, முத்தலிக்கை கைதுச் செய்ய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை

மங்களூர்:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கர்நாடக மாநில மாவட்ட கமிட்டி ஸ்ரீராமசேனாவை தடைச் செய்யவும், அதன் தலைவர் பிரமோத் முத்தலிக்கை கைதுச்செய்து சிறையிலடைக்கவும் கோரி போராட்டம் மற்றும் பேரணி நடத்தியது. மாவட்ட துணைக்கமிஷனர் அலுவலகத்தின் முன்னால் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துக் கொண்டு உரை நிகழ்த்தினார் பாப்புலர் ஃப்ரண்டின் கர்நாடக மாநில கமிட்டி உறுப்பினர் அப்துல் ரஸ்ஸாக் கெம்ரால்.

அவர் தனது உரையில்,"தெஹல்கா ரகசிய கேமரா ஆபரேசனில் முத்தலிக்கின் உண்மையான முகம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்ரீராமசேனா தேசத்தின் பாதுகாப்பிற்கும், நல்லிணக்கத்திற்கும் அச்சுறுத்தலாக விளங்கும் அமைப்பு என்பது வெளிச்சமாகியுள்ளது.

முத்தலிக் ஸ்ரீராமசேனா என்பதை ‘குண்டா சேனா’ என்று மாற்றுவதுதான் சிறந்தது. முத்தலிக் ஹிந்துப் பெண்களிடம் ஆயுதத்தை தூக்கி தாக்குதல் நடத்த கூறுகிறார்.

சிறுபான்மையினருக்கு எதிராக 900 நபர்கள் தற்கொலைத் தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் சர்ச்சுகள், பப்புகள் ஆகியவற்றின்மீது நடத்தப்பட்ட தாக்குதலை நியாயப்படுத்தி வருகிறார். ஆகவே முத்தலிக்கை கைதுச்செய்து சிறையிலடைக்க வேண்டும். ஸ்ரீராம சேனாவை உடனடியாக தடைச் செய்யவேண்டும்" எனக் கூறினார்.

பி.எஃப்.ஐ யின் ஷாஃபி பெல்லாரி கூறுகையில், "முத்தலிக்கிடம் அவருடைய நிழலுக தாதாக்களின் தொடர்புக் குறித்தும், தீவிரவாதச் செயல்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தவேண்டும்.

கிரிமினல்களான முத்தலிக் மற்றும் பிரசாத் அத்தாவர் தேச விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை தீவிரவாதிகளாக கருதி கைத்துச்செய்து ஸ்ரீராம சேனாவை தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் சேர்க்கவேண்டும்" எனக் கூறினார்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டோர் மனுவை துணைக்கமிஷனர் வழியாக உள்துறை அமைச்சருக்கு அளித்தனர்.
செய்தி:twocircles.net

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஸ்ரீராமசேனாவை தடைச்செய்து, முத்தலிக்கை கைதுச் செய்ய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை"

கருத்துரையிடுக