16 மே, 2010

அமெரிக்காவுக்கு பாக்.தாலிபான் எச்சரிக்கை

வாஷிங்டன்:அமெரிக்காவுக்கு மீண்டும் பாக்.தாலிபான் மிரட்டல் விடுத்துள்ளது. அமெரிக்காவின் அஜெண்டாவை பாகிஸ்தானில் செயல்படுத்த முயன்றால் அமெரிக்கா பற்றி எரியும் என மிரட்டல் விடுத்துள்ளது பாக்.தாலிபான்.

இந்த மாதம் ஒன்றாம் தேதி நியூயார்க் டைம் சதுக்கத்தில் குண்டுவெடிப்பை நிகழ்த்த முயன்றதாக பாக்.தாலிபான் மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டியிருந்தது.

நேற்று முன்தினம் வெளியிட்ட வீடியோச் செய்தியில் பாக்.தாலிபான் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இனி நடக்கப் போவது வெறும் முயற்சிகள் இல்லை என்றும், அமெரிக்கா பற்றி எரியப் போகிறது என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இச்செய்தியை பாகிஸ்தான் தாலிபானின் செய்தித் தொடர்பாளர் அஸீம் தாரிக் அளித்துள்ளார்.

போராளிகளை ஒழிக்க அமெரிக்காவால் முடியலாம்.ஆனால் இஸ்லாத்தையும், ஜிஹாதையும் அழிக்க அமெரிக்காவால் முடியாது. புனிதப்போர் தொடரும். அதில் அமெரிக்கா எரிந்து சாம்பலாகும். தான் தோண்டிய குழியிலேயே அமெரிக்காவின் முடிவு என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பொது இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கும் தாலிபானுக்கும் தொடர்பில்லை என்று தாரிக் தெரிவித்தார். இத்தகைய தாக்குதல்கள் தங்களின் கொள்கையல்ல என்றும், தாலிபானுக்கு மோசமான பெயரை ஏற்படுத்த நடக்கும் முயற்சி என்றும் அவர் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அமெரிக்காவுக்கு பாக்.தாலிபான் எச்சரிக்கை"

கருத்துரையிடுக