17 மே, 2010

சிலி:பாக்.குடிமகன் ஸைஃபுர் ரஹ்மானை நீதிமன்றம் விடுதலைச் செய்தது

சாண்டியாகோ:சிலியில் அமெரிக்க தூதரகத்தில் வெடிப்பொருட்களுடன் நுழைந்தார் எனக் குற்றஞ்சாட்டி கைதுச் செய்யப்பட்ட பாகிஸ்தான் குடிமகன் ஸைஃபுர் ரஹ்மானை நீதிமன்றம் விடுதலைச் செய்தது.

சிலியில்தான் வசிக்க வேண்டுமென்றும், வாரத்தில் ஒருநாள் புலனாய்வு அதிகாரிகளுக்கு முன்னால் ஆஜராக வேண்டுமென்றும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் நீதிமன்றம் அவரை விடுதலைச் செய்தது.

ஸைஃபுர் ரஹ்மானுக்கு ஏதேனும் பயங்கரவாத இயக்கங்களுடனான தொடர்பு குறித்து கண்டறிய இயலவில்லை என்று கூறிய நீதிமன்றம் தாக்குதல் நடத்த திட்டமிட்டதை நிரூபிக்க போலீசாரால் இயலாததால் ஸைஃபுர் ரஹ்மானை சிறையில் அடைப்பது அநியாயம் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

புலனாய்வு விசாரணை நடப்பதால்தான் சிலியில் தங்குவதற்கு உத்தரவிட்ட நீதிமன்றம் இவ்விசாரணைக்கு 3 மாதம் கால அளவை நிர்ணயித்தது.

தீர்ப்பைக் கேட்ட ஸைஃபுர் ரஹ்மான் வெற்றிக்களிப்போடு கையை உயர்த்திக்காட்டி மகிழ்ச்சியை தெரிவித்தார்.

அதேவேளையில் போலீசார் ஸைஃபுர் ரஹ்மான் தொழக்கூடிய மஸ்ஜிதிலும், அபார்ட்மெண்டிலும் சோதனை மேற்கொண்டது. அவருக்கு வீடு வழங்கிய எகிப்து நாட்டைச் சார்ந்தவரிடம் விசாரணை நடத்தியது.

சுற்றுலா மேலாண்மை படிப்பை கற்பதற்காக 28 வயதான ஸைஃபுர் ரஹ்மான் சிலிக்கு வந்திருந்தார். அமெரிக்க தூதரகத்திலிருந்து அவருக்கு அழைப்பு வந்ததால் அங்கு சென்ற ஸைஃபுர் ரஹ்மானை வெடிப்பொருட்கள் வைத்திருந்ததாக கூறி கைதுச் செய்திருந்தனர்.

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் டைம்ஸ் சதுக்க வெடிக்குண்டு தாக்குதல் திட்டத்திற்கு பாகிஸ்தான் குடிமகன் ஒருவர் கைதுச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் பாகிஸ்தானிகளுக்கெதிராக அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சிலி:பாக்.குடிமகன் ஸைஃபுர் ரஹ்மானை நீதிமன்றம் விடுதலைச் செய்தது"

கருத்துரையிடுக