12 மே, 2010

எஸ்.எம்.கிருஷ்ணா பாகிஸ்தான் செல்கிறார்: பேச்சுவார்த்தை ஜூலை 15 ஆம் தேதி துவக்கம்

புதுடெல்லி/இஸ்லாமாபாத்:மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வருகிற ஜூலை மாதம் 15ஆம் தேதி இஸ்லாமாபாத் செல்லவிருக்கிறார்.

இரு நாடுகளுக்கிடையேயான பரஸ்பர நம்பிக்கையை பலப்படுத்தவும், பேச்சுவார்த்தையை முன்னேற்ற பாதையில் கொண்டுச் செல்வதற்கான காரியங்களை தீர்மானிக்கவும் அவர் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரைஷியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.

அமைச்சக பேச்சுவார்த்தைக்கு முன்னர் வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் சல்மான் பஷீருடன் பேச்சுவார்த்தையை நடத்துவார். இப்பேச்சுவார்த்தை இம்மாதம் 26 ஆம் தேதி நடைபெறும்.

சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்களின் மாநாட்டின்போது இப்பேச்சுவார்த்தை நடைபெறும். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் மாநாட்டிற்கு செல்வார் நிருபமா.

கிருஷ்ணா-குரைஷி இருவரின் பேச்சுவார்த்தையின் நிகழ்ச்சிநிரலை இரு நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர்கள் தீர்மானிப்பர். கிருஷ்ணாவிற்கும், குரைஷிக்கும் இடையில் கடந்த செவ்வாய்கிழமை நடந்த 25 நிமிட தொலைபேசி உரையாடலின்போது இந்த சந்திப்பிற்கு ஏற்பாடானது.

கிருஷ்ணாவை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து முதலில் குரைஷி தொலைபேசியில் தொடர்புக்கொண்டார். சந்திப்பை எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக கிருஷ்ணா தெரிவித்தார். பேச்சுவார்த்தைகள் இருநாடுகளையும் நெருங்கச் செய்யும் என கிருஷ்ணா நம்பிக்கை தெரிவித்தார்.

திறந்த மனதுடனும், எதிர்பார்ப்புடனும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு தயாராவதாக குரைஷி இஸ்லாமாபாத்தில் தெரிவித்தார்.பேச்சுவார்த்தைக்கு இடையூறாக தீவிரவாதத்தை அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்துவதற்கான காரியங்களைக் குறித்து தானும், குரைஷியும் விவாதிப்போம் என கிருஷ்ணா தெரிவித்தார்.

பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் இரு நாடுகளுக்கிடையேயான பிரச்சனைகளைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கிறோம்.

இரு நாடுகளின் பிரதமர்கள் கடந்த மாதம் பூட்டானின் தலைநகர் திம்புவில் சந்தித்த பொழுது வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுக்கிடையே பேச்சுவார்த்தையை எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக ஏற்பாடுச்செய்து இரு நாடுகளுக்கிடையேயான இடைவெளியை குறைக்க முயலவேண்டும் என இருவரும் வலியுறுத்தியிருந்தனர்.

இந்தியாவின் முக்கிய கவலையான தீவிரவாதத்தைக் குறித்து தீர்மானிக்க பாகிஸ்தான் பிரதமரின் உறுதிமொழியைத் தொடர்ந்து நல்லுறவில் ஏற்பட்ட பயன் தரத்தக்க மாற்றத்தின் சூழலில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கிருஷ்ணா மாநிலங்களவையில் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

தீவிரவாதம்,சியாச்சின்,கஷ்மீர் தொடர்பான பிரச்சனைகளில் வெளியுறவுத்துறை அமைச்சக மட்டத்திலான பேச்சுவார்த்தைக் குறித்து இருவருடைய சந்திப்பில் முடிவெடுக்கப்படும்.

மும்பைத் தாக்குதலைத் தொடர்ந்து தடைப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை கடந்த ஜூலையில் எகிப்தில் வைத்து இருநாட்டு பிரதமர்களும் சந்தித்தப் பிறகு முதன் முதலாக சார்க் மாநாட்டின்பொழுது திம்புவில் பிரதமர் மன்மோகன்சிங்கும், பாக்.பிரதமர் கிலானியும் சந்தித்து பேசினர்.

இந்தியாவுக்கெதிரான தீவிரவாதத்திற்கு பாகிஸ்தான் மண்ணை பயன்படுத்த விடமாட்டோம் என கிலானி மன்மோகன் சிங்கிடம் உறுதியளித்திருந்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "எஸ்.எம்.கிருஷ்ணா பாகிஸ்தான் செல்கிறார்: பேச்சுவார்த்தை ஜூலை 15 ஆம் தேதி துவக்கம்"

Mohamed gani சொன்னது…

inimel RSS kaaranug asummavey irukka maattanuga,aabathu indiavukunu solli makkalai muttaalgalaki naattai adimai naadaga maatra yetrpadu seyvaan???????????????

கருத்துரையிடுக