12 மே, 2010

விவாகரத்து பெறாமல் மீண்டும் திருமணம் புரிவது இஸ்லாத்திற்கு மாற்றமானது என நீதிமன்றம் தீர்ப்பு

அலகாபாத்:முதல் மனைவியிடமிருந்து விவாகரத்து பெறாமலும் அவருடனான உறவின் மூலம் பெற்றக் குழந்தைகளை பாதுகாக்காமல் மீண்டும் திருமணம் புரிந்தது செல்லாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

மதமாற்றம் செய்யாமல் அந்நிய மதத்திலுள்ள பெண்ணை திருமணம் புரிவது அது செல்லாததும் குர்ஆனில் கூறப்பட்ட சட்டத்திற்கு மாற்றமானதுமாகும் என நீதிபதிகளான விநோத் பிரசாத், ராஜேஷ் சந்த்ரா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் கூறியது.

கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி குஷ்பு என்ற ஹிந்துப் பெண்ணை திருமணம் முடித்த அலகாபாத்தைச் சார்ந்த தில்பர் ஹபீப் சித்தீகி என்பவர் தாக்கல்செய்த மனுவை தள்ளுபடிச் செய்து நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியது.

மேஜராகாத தனது மகளை சித்தீகி கடத்திச் சென்று திருமணம் முடிக்க நிர்பந்திக்கிறார் என குஷ்புவின் தாயார் கொடுத்த வழக்கின் எஃப்.ஐ.ஆரை தள்ளுபடிச் செய்யவேண்டுமென்று கோரி சித்தீகி உயர்நீதிமன்றத்தை நாடினார்.

குஷ்பு மேஜரானதை உறுதிச்செய்யும் அவருடைய மேல்நிலைப்பள்ளி சான்றிதழை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார் சித்தீகி. பரஸ்பர சம்மதத்துடன்தான் திருமணம் முடித்ததாக குஷ்பு முக்கிய அதிகாரிகளின் முன்பு தெரிவித்ததையும் சித்தீகி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் புரிவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், தான் ஏற்கனவே திருமணம் புரிந்தவர் என்றும், மூன்று குழந்தைகளின் தந்தை என்பதையும் குஷ்புவிடம் தெரிவிக்காமல் சித்தீகி மறைத்ததை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொண்டது.

சித்தீகியின் முதல் மனைவி நீதிமன்றத்தில் ஆஜராகி தன்னையும், தனது மூன்று குழந்தைகளையும் சித்தீகி கைவிட்டுவிட்டார் என அவர் குற்றஞ்சாட்டினார்.

திருமணம் முடித்திருந்தாலும் சித்தீகி குஷ்புவை ஏமாற்றிவிட்டார் என நீதிமன்றம் கூறியது. சட்டப்படி இஸ்லாமிய திருமணத்தில் மணமகனும், மணமகளும் முஸ்லிம்களாக இருக்கவேண்டும். இம்மனுவில் இது திருப்திகரமாக இல்லை எனவும் கூறியது.

தீர்ப்பின்போது கீழ்க்கண்ட குர்ஆனின் வசனத்தை மேற்கோள்காட்டினார்கள் நீதிபதிகள்.
"அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்) களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்." (அல்குர்ஆன் 4:3)

எஃப்.ஐ.ஆர் நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும், குஷ்புவை அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "விவாகரத்து பெறாமல் மீண்டும் திருமணம் புரிவது இஸ்லாத்திற்கு மாற்றமானது என நீதிமன்றம் தீர்ப்பு"

கருத்துரையிடுக