12 மே, 2010

பக்ராமில் அமெரிக்காவின் இரகசிய சிறையை கண்டுபிடித்தது ரெட் க்ராஸ்

காபூல்:ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் விமானநிலையம் அமைந்துள்ள பக்ராமில் ரகசிய சிறை உள்ளதாக ரெட் க்ராஸ் நடத்திய புலனாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இங்கு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட நபர்களின் பட்டியலை தயார் செய்துக் கொண்டிருப்பதாகவும், ஏழு நபர்களை கண்டறிந்துள்ளதாகவும் ரெட் க்ராஸ் கூறுகிறது.

பக்ராமில் ஒரு தனிக்கட்டிடத்தில் இச்சிறை உள்ளது. கைதுச் செய்தவுடனேயே இச்சிறைக்கு கொண்டுவரப்படுபவர்களை சித்திரவதைக்கு ஆளாக்குவர்.

அடி,உதை, தூங்க விடாமலிருத்தல், உறவினர்களையும், வழக்கறிஞரையும் சந்திக்கவிடாமல் தடுப்பது, 24 மணிநேரமும் கடும் வெப்பத்தை தரும் பல்பின் கீழ் இருக்கவைத்தல் உள்ளிட்ட சித்திரவதைகள் இங்கே அரங்கேறுகிறது.

இரகசிய சிறையைக் குறித்து பி.பி.சி வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து ரெட்க்ராஸ் புலனாய்வை துவங்கியது. 'ப்ளாக் ஜெயில்' என்றுதான் இதனை சிறைவாசிகள் அழைத்துள்ளனர். ஒன்பது சிறைவாசிகளின் பேட்டியை பி.பி.சி வெளியிட்டிருந்தது.

ஆப்கானிஸ்தானில் பர்வான் என்ற ஒரேயொரு சிறைதான் அதிகாரப்பூர்வமாக உள்ளது. பக்ராம் சிறைக்கொட்டகை சட்டவிரோதமானது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பக்ராமில் அமெரிக்காவின் இரகசிய சிறையை கண்டுபிடித்தது ரெட் க்ராஸ்"

கருத்துரையிடுக