குஜராத் கலவரத்தில் சம்பந்தமிருப்பதாக கலவரத்தில் கொல்லப்பட்ட காங்கிரஸ் முன்னாள் மக்களவை உறுப்பினர் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரியும் கம்யூனிஸம் காம்பட் ஆசிரியர் தீஸ்தா செடல்வாட் அளித்த புகாரின் பேரில் வி.எச்.பி. தலைவர் பிரவீன் தொகடியா குஜராத் கலவரத்தை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவால் விசாரிக்கப்பட்டார்.
விசாரணைக்கு பின் நிருபர்களை சந்தித்த தொகாடியா இன்னும் சில நாட்களில் தன் மேல் புகார் கொடுத்தமைக்காக ஜாகியா மற்றும் தீஸ்டா மேல் நடவடிக்கை எடுப்பேன் என்று குறிப்பிட்டார். என்ன மாதிரியான நடவடிக்கை என கேட்டதற்கு விவரிக்க மறுத்து விட்டார்.
தான் பேசிய பேச்சுக்களுக்காக நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் ஜாகியாவின் வார்த்தைகள் எனக்கு பைபிள் மாதிரி என்று பேசிய சிறப்பு புலனாய்வு குழு தலைவர் ராகவன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
போலி என்கவுண்டர்கள் சம்பந்தமாக காவல்துறை அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறித்து கேட்ட போது காவல்துறை அதிகாரிகள் சிறையிலும் தீவிரவாதிகள் சுதந்திரமாக வெளியில் குண்டு வைத்தும் வருகின்றனர் என்ற தொகாடியா ஓட்டு மொத்த காவல்துறையையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டியது தானே என்று கேட்டார்.

inneram
0 கருத்துகள்: on "தீஸ்தா செடல்வாட், ஜகியா ஜாப்ரி மேல் நடவடிக்கை எடுப்பேன் : தொகாடியா மிரட்டல்"
கருத்துரையிடுக