புதுடெல்லி:கஷ்மீரில் ஊடுருவல்காரர்கள் எனக்கூறி நிரபராதிகளான 3 அப்பாவி இளைஞர்களை போலி என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் ராணுவ மேஜர், டெரிட்டோரியல் ஜவான் உள்ளிட்ட இதர நான்குபேருக்கெதிராக போலீஸ் வழக்கு பதிவுச் செய்துள்ளது.
வெள்ளிக்கிழமை மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் 3 இளைஞர்களின் உடல்களும் புதைக்கப்பட்ட இடங்களிலிருந்து வெளியே எடுக்கப்பட்டன. ஷஹ்ஸாத் அஹ்மத் கான், ரியாஸ் அஹ்மத் லோன், முஹம்மது ஷாஃபி லோன் ஆகியோரின் உடல்களை உறவினர்கள் அடையாளம் காட்டினர்.
வடக்கு கஷ்மீரில் ராஃபியாபாத்திலிலுள்ள நதியால் கிராமத்திலிருந்து 3 இளைஞர்கள் காணாமல் போன சம்பவத்தில் முன்னாள் ஸ்பெஷல் போலீஸ் ஆபீசர் பஷீர் அஹ்மத், அவருடைய நண்பர் ஃபயாஸ் அஹ்மத் லோன் ஆகியோரை கைது செய்திருந்தனர். டெரிட்டோரியல் ஜவான் அப்பாஸ் ஹுஸைன் ஷாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அஹ்மதையும், லோனையும் விசாரித்ததில்தான் இவர்களுடைய சதித்திட்டம் வெளியானது. அப்பாஸ் ஹுசைன் ஷா தான் இத்திட்டத்தின் முக்கிய சூத்திரதாரி. ஹுஸைன் ஷா ராணுவ மேஜருக்காக அஹ்மத், லோன், அப்துல் ஹமீத் பட் ஆகியோருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி 3 இளைஞர்களையும் ஆசையூட்டி எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிற்கு அருகே வரவழைத்துள்ளார்.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் மச்சில் செக்டரில் ராணுவத்தின் போர்டர்களாக வேலைச்செய்தால் 2000 ரூபாய் தரலாம் என வாக்குறுதியளித்து இளைஞர்களை அழைத்துச் சென்றுள்ளனர். மச்சில் செக்டரில்தான் மேஜர் பணியாற்றியுள்ளார்.
ஹுசைன் ஷாவின் வலையில் சிக்கிய 3 இளைஞர்களையும் லோனும் அஹ்மத் பட்டும் சேர்ந்து முதலில் குப்வாராவில் ஸோகம் கிராமத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அங்கே காத்திருந்த வாகனத்தில் ஏற்றி போலி என்கவுண்டருக்காக எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஏப்ரல் 30 ஆம் தேதி நடந்த போலி என்கவுண்டரில் அப்பாவியான் 3 இளைஞர்களை சுட்டுக் கொன்ற பிறகு இறந்த உடல்களை அடக்கம் செய்வதற்காக போலீஸாரிடம் ஒப்படைத்த பொழுதே சந்தேகம் ஏற்பட்டது.
3 இளைஞர்களின் தலையில்தான் துப்பாக்கியால் சுடப்பட்டிருந்தது. என்கவுண்டரில் தலையில் குண்டுபாய வாய்ப்பு மிகவும் குறைவாகும். இதுதான் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
கடுமையான குளிர்பிரதேசமான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் வழியாக ஊடுருவினார்கள் என ராணுவம் கூறியது. ஆனால் இறந்துபோன இளைஞர்கள் அணிந்திருந்த ஆடைகள் கோடைகாலத்தில் அணிவதாகும். இதுவும் போலீசாருக்கு சந்தேகத்தை அதிகப்படுத்தியது. ஊடுருவலை முறியடித்து தாங்கள் 3 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றதாக ராணுவம் அறிவித்திருந்தது.
அதுமட்டுமல்ல கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து மிகப்பெரிய அளவில் ஆயுதங்கள் கைப்பற்றியதாகவும் ராணுவம் உரிமை கொண்டாடியது. ராணுவ வீரர்கள் தொடர்புடைய இந்த போலி என்கவுண்டர் கொலைகள் தொடர்பான புலனாய்வில் முழுமையாக ஒத்துழைப்பதாகவும், குற்றவாளிகளை கண்டறிந்தால் உரிய தண்டனை வழங்கப்படும் எனவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனி அறிவித்துள்ளார்.
இச்சம்பவத்தைக் குறித்து ராணுவமும் விசாரிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். இச்சம்பவத்தைக் குறித்து மாஜிஸ்ட்ரேட் விசாரணை போதாது என்றும், ஐ.நா விசாரிக்கவேண்டும் என்றும் ஹுரியத் மாநாட்டுக் கட்சியின் தலைவர் செய்யத் அலிஷா கிலானி வலியுறுத்தியுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "கஷ்மீரில் போலி என்கவுண்டர்:இராணுவ மேஜர் உட்பட 5 பேருக்கெதிராக வழக்கு"
கருத்துரையிடுக