துபை:கல்வியின் முக்கியத்துவம் மற்றும் அதன் அவசியத்தை வலியுறுத்தி எமிரேட்ஸ் இந்தியா ஃபிரெடர்னிட்டி ஃபோரம்(EIFF) 'பள்ளி செல்வோம்' என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக துபையில் எமிரேட்ஸ் இந்தியா ஃபிரெடர்னிட்டி ஃபோரம் (EIFF) சார்பாக மே28 அன்று 'பள்ளி செல்வோம்' பிரச்சார தொடக்க நிகழ்ச்சியும் 'கல்வி விழிப்புணர்வு கையேடு' மற்றும் 'நாமும் சாதிக்கலாம்' என்ற மேற்படிப்பு வழிகாட்டி நூல் வெளியீட்டு விழாவும் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சகோதரர் நிஃமத்கான் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கல்வியின் அவசியம் மற்றும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் இஸ்லாம் கல்விக்கு வழங்கியிருக்கும் முன்னுரிமைப் பற்றியும் ஜனாப்.செய்யதலி உரையாற்றினார்.
இறுதியாக சகோதரர் அஹமது நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சகோதரர்கள் கலந்துக் கொண்டு இலவசமாக வழங்கிய 'நாமும் சாதிக்கலாம்' என்ற நூலை பெற்றுக் கொண்டு வாழ்த்திச் சென்றனர்.
0 கருத்துகள்: on "துபையில் நடைபெற்ற 'பள்ளி செல்வோம்' பிரச்சார தொடக்க நிகழ்ச்சி மற்றும் 'நாமும் சாதிக்கலாம்' மேற்படிப்பு வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா"
கருத்துரையிடுக