29 மே, 2010

ஐ.நா பரிசீலனைக் கூட்டம் நிறைவடைந்தது

அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கை பற்றிய 8வது ஐ.நா பரிசீலனைக் கூட்டம், நியூயார்க் மாநகரிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் மே28 அன்று நிறைவடைந்தது.

'இறுதி ஆவணம்' இதில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அணு ஆயுதக் குறைப்பை முன்னேற்றுவது, அணு ஆயுதப் பரவலை தடுப்பது, அணு ஆற்றலை அமைதி நோக்கத்துக்காக பயன்படுத்துவது, மத்திய கிழக்குப் பிரதேசத்தில் பேரழவு ஏற்படுத்தும் ஆயுதமில்லாத மண்டலத்தை அமைப்பது ஆகியவை குறி்த்து, பல்வேறு தரப்புகள் ஒத்தக்கருத்துக்களை உருவாக்கின.

இதன்படி, அணு ஆயுதக் குறைப்பு பயனுள்ள முன்னேற்றம் பெறுவதை முன்னேற்ற, அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையொப்பமிட்ட அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய 5 உறுப்பு நாடுகள் வாக்குறுதி அளித்தன. தவிர, இவ்வுடன்படிக்கையில் சேராத இந்தியா, இஸ்ரேல், பாகிஸ்தான் ஆகியவை நிபந்தனையின்றி இதில் கையொப்பமிட வேண்டும் என்றும் இவ்வாவணம் வேண்டுகோள் விடுத்தது.
CRI

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஐ.நா பரிசீலனைக் கூட்டம் நிறைவடைந்தது"

கருத்துரையிடுக