29 மே, 2010

கிழக்கு ஆப்கானிஸ்தானிலிலுள்ள நகரை மீட்டது தாலிபான்

காபூல்:ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான நூரிஸ்தானில் பர்கே-மடால் நகரை தாலிபான் போராளிகள் கைப்பற்றினர்.இதனை ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஸபிஹுல்லாஹ் முஜாஹித் ப்ரஸ் டி.வியின் செய்தியாளரிடம் தெரிவிக்கையில், தாலிபான் போராளிகள் சனிக்கிழமை காலையில் இந்நகரை கைப்பற்றியதாகவும், ஆப்கான் படையினருக்கும் தாலிபான்களுக்குமிடையே நகரை மீட்பதில் கடும் போராட்டம் நிகழ்ந்ததாகவும் குறிப்பிட்டார்.

மேலும் முஜாஹித் தெரிவிக்கையில் இப்போராட்டம் வெள்ளிக்கிழமை இரவே துவங்கியது எனவும், இதில் 28 ஆப்கான் படைவீரர்கள் கொல்லப்பட்டனர் என்றும் தெரிவித்தார்.

நூரிஸ்தான் எம்.பியான ஹவா ஆலம் தெரிவிக்கையில் பர்கே-மடால் நகரின் தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் இந்நகர் தாலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்திருக்கக்கூடும் எனவும் அவர் கூறினார்.

அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்பு படையினர் ஆப்கான் படைகளுக்கு போதிய அளவு உதவிச் செய்யாததும் இந்நகரை இழப்பதற்கு காரணம் என ஹவா ஆலம் குற்றஞ்சாட்டுகிறார்.

இதற்கிடையில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த நூரிஸ்தான் போலீஸ் தலைவர் முஹம்மது காஸிம் பைமான் தாலிபான்கள் பர்கே-மடாலை கைப்பற்றியதை உறுதிச் செய்தார்.மேலும் ஆப்கான் படையினர் அந்நகரை விட்டும் வெளியேறியதாகவும் தெரிவித்தார்.
செய்தி:Presstv

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கிழக்கு ஆப்கானிஸ்தானிலிலுள்ள நகரை மீட்டது தாலிபான்"

கருத்துரையிடுக