அமெரிக்கா தன் அடக்கு முறையை ஈரான் மேல் சுமத்தினாலும், ஈரான் அமெரிக்காவிற்கு சிரம்பணியாது என்று பிரபல அமெரிக்க அறிஞர் நோம் சோம்ஸ்கி தெரிவித்துள்ளார். ௦ஃபலஸ்தீனில் நுழைவதற்கு அனுமதி மறுத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சோம்ஸ்கி, மற்ற நாடுகளை ஆளும் அரசுகளின் விருப்பத்தை அமெரிக்கா புறகணித்து வருகின்றது என்றார்.
தன் உத்தரவுகளை மட்டும் தான் மற்ற நாடுகள் பின்பற்ற வேண்டும் என்ற அடக்கு முறையையே அமெரிக்கா கடைபிடிப்பதாக அவர் குற்றம்சாட்டினார். இது தான் ஈரானின் விவகாரங்களில் நடக்கிறது. ஈரான் மற்ற நாடுகளின் உத்தரவுகளை பின்பற்ற விரும்புவதில்லை மாறாக அது தன் சொந்த ஜனநாயகத்தை பின்பற்ற விரும்புகிறது என்று சோம்ஸ்கி மேலும் தெரிவித்தார்.
அவர் தனது உரையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேலிய படைகள் தெற்கு லெபனானிலிருந்து வாபஸ் பெற்றதை குறிப்பிட்டார்.
தென்ஆப்ரிக்காவின் 'அபார்தீட்' எனப்படும் இனஒதுக்கல் கொள்கையுடன் இஸ்ரேலை ஒப்பீடுச்செய்து சோம்ஸ்கி குறிப்பிடுகையில், தென்ஆப்ரிக்காவில் இனஒதுக்கல் கொள்கை அமுலிலிருந்த காலக்கட்டத்தில், தென் ஆப்ரிக்கா வெள்ளையர்கள் தங்கள் சொந்த நாட்டு கருப்பு இன மக்களை பற்றி கவலைப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவளித்தனர்.
ஆனால் ஃபலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேலோ கண்மூடித்தனமாக நடந்து கொண்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
இஸ்ரேலியர்களுக்கு ஃபலஸ்தீனர்கள் தேவையே இல்லை; தன் சொந்த நாட்டில் அமெரிக்கர்கள் சிதறியது போல், இஸ்ரேலும் ஃபலஸ்தீனர்கள் தங்கள் நாட்டில் சிதறுவதையே நோக்கமாக வைத்து செயல் படுவதாக அவர் மேலும் விவரித்தார்.
ஃபலஸ்தீனர்களை பற்றி ஒரு ‘ஈ’ அளவும் இஸ்ரேல் கவலை கொள்ளாதது தென்னாபிரிக்காவின் ‘அபார்தீட்’ என்ற இனஒதுக்கல் கொள்கையை விட மோசமானது என்றார் சோம்ஸ்கி.
முன்னதாக ரமல்லாவில் உள்ள ஃபலஸ்தீன் யுனிவர்சிட்டியில் உரை நிகழ்த்த திட்டமிட்ட நோம் சோம்ஸ்கியை இஸ்ரேல் அனுமதி மறுத்தது. பத்திகையாளர்கள் மற்றும் தலைவர்களின் கண்டனத்திற்கு ஆளான பிறகு இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு இதற்கு மன்னிப்புக் கோரினார். அடுத்த முறை சோம்ஸ்கி வரும்போது அனுமதி மறுக்கப்படாது என்று அவர் உறுதியும் அளித்தார்.
Press TV
0 கருத்துகள்: on "அமெரிக்காவின் அடக்கு முறைக்கு ஈரான் அடிபணியாது– நாம் சோம்ஸ்கி"
கருத்துரையிடுக