29 மே, 2010

ஷொராஹ்ப்தீன் நண்பர் துள்சிராம் போலி என்கவுண்டர் வழக்கு: உண்மை கண்டறியும் நார்கோ சோதனையை நிராகரித்தார் தண்டா மாஜிஸ்திரேட்

பாலன்பூர்:துள்சிராம் போலி என்கவுண்டர் வழக்கில் டஹோத் சூப்பர் இன்ட்டேன்டன்ட் விபுல் அகர்வால், ராஜ்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆஷிஷ் பாண்டியா உட்பட 7 போலீஸ் அதிகாரிகளின் உண்மை கண்டறியும் நார்கோ சோதனையின் அறிக்கைகளை பனாச்கந்தாவில் உள்ள தண்டா நீதிமன்ற மாஜிஸ்திரேட் எஸ்.எஸ்.ஜோஷி நிராகரித்துள்ளார்.

எனினும் இன்ஸ்பெக்டர் பண்டியாவின் காவலை நீடித்துள்ள நீதிபதி மற்ற 6 அதிகாரிகளை பாலன்பூர் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இது குறித்து, துணை சூப்பர் இன்ட்டேன்டன்ட் பனாச்கந்தா கூறுகையில், சி.ஐ.டி கிரைம் பிரான்ச் முன்னதாக கைதுசெய்யப்பட்ட 7 அதிகாரிகளின் நார்கோ பரிசோதனை மேற்கொள்ள ராஜஸ்தான் அதிகாரிகளுடன் சேர்ந்து ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார்.

நீதிபதியின் இந்நிராகரிப்பை விமர்சித்துள்ள டிபென்ஸ் கவுன்சில் சிரீஸ் மோடி, தண்டா மாஜிஸ்திரேட்டின் இத்தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் கருத்திற்கு முரண்பட்டவை என்றார்.

குற்றத்தை ஒப்புக்கொள்ளாத குற்றவாளிகளிடம் தான் நார்கோ பரிசோதனையை மேற்கொள்வது தவறு என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்ததாக மோடி மேலும் விவரித்தார்.

அண்மையில்தான் நார்கோ சோதனை குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
source:Timesofindia

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஷொராஹ்ப்தீன் நண்பர் துள்சிராம் போலி என்கவுண்டர் வழக்கு: உண்மை கண்டறியும் நார்கோ சோதனையை நிராகரித்தார் தண்டா மாஜிஸ்திரேட்"

கருத்துரையிடுக