புதுடெல்லி:மிக விரைவில் என்னை தூக்கிலிட வேண்டும் என்று நான் கூறியதாக வழக்கறிஞர் என்.டி.பாஞ்சோலி கூறியதாக வெளிவந்த செய்தி அடிப்படையற்றது என்றும், பாஞ்சோலி தனது வழக்கறிஞர் அல்ல என்றும் பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் அநியாயமாக குற்றஞ்சாட்டப்பட்டு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட அஃப்சல் குரு கூறியுள்ளார்.
அரசியல் சிறைக்கைதிகளின் விடுதலைக்காக செயல்படும் மனித உரிமை அமைப்பான கமிட்டி ஃபார் ரிலீஃப் ஆஃப் பொலிட்டிக்கல் ப்ரிஸனர்ஸ்(CRPP) தலைவருக்கு தனது சொந்த கையெழுத்தால் எழுதிய கடிதத்தில்தான் அஃப்சல் குரு இதனை தெரிவித்துள்ளார்.
தனிமைச்சிறையில் அடைப்பட்டுக் கிடந்து வெறுத்துப் போனதாகவும், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் தன்னை தூக்கில் போடவேண்டும் என்றும் வழக்கறிஞர் பாஞ்சோலி கூறியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து இதுத்தவறான செய்தி என்றும், பாஞ்சோலி அஃப்சல் குருவின் வழக்கறிஞர் அல்ல என சி.ஆர்.பி.பி உடனே அறிக்கை வெளியிட்டது. இது சி.ஆர்.பி.பிக்கும் பாஞ்சோலிக்குமிடையே மோதலை உருவாக்கியது. அஃப்சல் குரு வழக்கை சி.ஆர்.பி.பி தவறாக கையாண்டதாக பாஞ்சோலி குற்றஞ்சாட்டினார்.
இதற்கிடையேதான் அஃப்சல் குரு தனது கையாலேயே கடிதம் எழுதியுள்ளார். ஐந்து விஷயங்களை இக்கடிதத்தில் அஃப்சல் குரு பட்டியலிடுகிறார்.
1.நான் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவில் முடிவெடுக்கும் வரை ஸ்ரீநகர் சிறைக்கு என்னை அனுப்பவேண்டும் என்றுதான் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்திருந்தேன்.
2.எஸ்.பி.டி.பி.ஆர், சி.ஆர்.பி.பி ஆகிய அமைப்புகளின் பிரதிநிதியாகத்தான் பாஞ்சோலி என்னை சந்தித்தார். எந்த சூழலிலும், எந்த நீதிமன்றத்திலும் பாஞ்சோலி எனக்காக ஆஜராகவில்லை.
3.எஸ்.பி.டி.பி.ஆர்.சி, சி.ஆர்.பி.பி ஆகிய அமைப்புகளுக்குத் தான் எனது பிரதிநிதியாக செயல்படும் உரிமை உண்டு.
4.என்.டி.பாஞ்சோலி எனது சட்ட ஆலோசகர் அல்ல.
5.சி.ஆர்.பி.பி எனது வழக்கை தவறாக கையாண்டது என்ற குற்றச்சாட்டு தவறானது.இவ்வளவு காலம் அவர்கள் எனக்காக வேண்டி செய்த காரியங்களுக்கு நான் அவர்களோடு கடமைப்பட்டுள்ளேன்.
ஏற்கனவே உயர்நீதிமன்றம் அஃப்சல் குருவின் வழக்கை விசாரணைக்கு எடுத்தபொழுது அஃப்சல் குருவுக்காக வாதாடிய வழக்கறிஞர் அஃப்சல் குருவை தூக்கிலிடுவதற்கு பகரமாக விஷம் குத்தி கொலை செய்தால் போதும் என அவர் கூறியதாக நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.
ஆனால்,அஃப்சல் குருவுக்கு இதுபற்றித் தெரியாது. மேலும் டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மனித உரிமை பணியாளராக செயலாற்றும் இந்த வழக்கறிஞரை தனக்காக வாதாட அஃப்சல் குரு நியமிக்கவும் இல்லை.
அஃப்சல் குருவை தூக்கிலடக் கூடாது என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு என்று சி.ஆர்.பி.பி நேற்று வெளியிட்ட பத்திரிகைக் குறிப்பில் கூறியுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பாஞ்சோலி எனது வழக்கறிஞர் அல்ல:அஃப்சல் குரு"
கருத்துரையிடுக