26 மே, 2010

எஸ்எஸ்எல்சி:82.56% பேர் தேர்ச்சி-495 மதிப்பெண்கள் பெற்று நெல்லை மாணவி ஜாஸ்மின் முதலிடம்

தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வில் 82.56சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். நெல்லை அரசுப் பள்ளி மாணவி ஜாஸ்மின் 495 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதவு மாணவியாக தேர்ச்சியடைந்துள்ளார்.

மாணவர்கள் 79.4 சதவீதமும், மாணவிகள் 85.5 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர். இதன்மூலம் இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

494 மதிப்பெண்களுடன் 4 பேர் இரண்டாம் இடம்:
செங்கல்பட்டைச் சேர்ந்த பிரியங்கா, கூடலூரைச் சேர்ந்த நிவேதா, புதுச்சேரியைச் சேர்ந்த தமிழரசன், கரூரைச் சேர்ந்த சிவப்பிரியா ஆகிய நான்கு பேரும் 494 மதிப்பெண்கள் எடுத்து 2வது இடத்தைப் பிடித்துள்ளனர்.

493 மதிப்பெண்களுடன் 3வது இடம் பிடித்த 10 பேர்:
அதே போல மதுரை ஜெயமுருகன், நாகராஜன், தென்காசி ரம்யா, நெல்லை ஜெயலின், நாமக்கல் இந்துஜா, கரூர் ராஜ்சூர்யா, பரமக்குடி பிரதீப்குமார், திலகவதி, செய்யாறு செந்தில்குமார், புதுச்சேரி ரேவதி ஆகிய 10 பேரும் 493 மதிப்பெண்கள் எடுத்து 3வது இடத்தைப் பிடித்துள்ளனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

7 கருத்துகள்: on "எஸ்எஸ்எல்சி:82.56% பேர் தேர்ச்சி-495 மதிப்பெண்கள் பெற்று நெல்லை மாணவி ஜாஸ்மின் முதலிடம்"

aves ahmed சொன்னது…

மாஷா அல்லாஹ் நம் சமுதாயத்த சேர்ந்த மாணவிகள் கடந்த 5 வருடங்களில் மூன்று முறை மாநில அளவில் முதலிடம் பெருவது பெருமையாக உள்ளது.

THAMEEM ANSARI சொன்னது…

அஸ்லாமலைக்கும்,

ஜாஸ்மின் அவர்களுக்கு அன்பு நிறைந்த வாழ்த்துக்கள். மேன்மேலும் உன்னுடையா வெற்றிதொடர வாழ்த்துக்கள் இன்ஷாஅல்லா.

A. Alameen (muthupet) சொன்னது…

மாஷா அல்லாஹ் வெற்றிதொடர வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அல்ஹம்துலில்லாஹ்.முஸ்லிம் சமுதாய மாணவ மாணவிகளின் வெற்றித்தொடர வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

ஆரணியில் உள்ள புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.நசீரீன் பாத்திமா 493 மதிப்பெண்கள் பெற்று 3-வது இட சாதனையில் ஒருவராக உள்ளார்.

hanifa சொன்னது…

படிப்பிலும் எங்கள் சமுதாயம் சளைத்ததல்ல என்பதை நிரூபித்த சமுதாய கண்மணிகளுக்கு வாழ்த்துக்கள்

Flint சொன்னது…

ماشا الله

கருத்துரையிடுக