3 மே, 2010

டெல்லி மெட்ரோ:எச்சில துப்பி அசுத்தம் செய்வோரைப் பிடிக்க பறக்கும் படைகள் அறிமுகம்

புதுடெல்லி:தலைநகர் டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் எச்சில் துப்புவோர், அசுத்தம் செய்வோரை பிடிக்க 4 பறக்கும் படைகளை டெல்லி மெட்ரோ ரயில் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அனைத்து நாள்களிலும், அனைத்து வழித்தடத்திலும் இந்த பறக்கும் படையினர் திடீர் சோதனைகளில் ஈடுபடுவர்.

இதன் மூலம் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களை அசுத்தம் செய்வோர் பிடிக்கப்பட்டு, அவர்களிடமிருந்து உரிய அபராதம் வசூலிக்கப்படும் என டெல்லி மெட்ரோ ரயில் கழக செய்தித் தொடர்பாளர் அனுஜ் தயாள் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியது: 'பொது இடங்களில் சமுக அக்கறையுடன் நடந்துகொள்ள பயணிகளை வற்புறுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொது இடங்களில் மக்கள் அசுத்தம் செய்வது பெருமளவு குறையும் என நம்புகிறோம்.

பறக்கும் படைகள் மட்டுமல்லாது ரயில்வே நிலைய ஊழியர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தில்லியில் வரும் அக்டோபர் மாதம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்க உள்ளன. இதையொட்டி வெளிநாட்டு பயணிகள் அதிக அளவில் இங்குள்ள ரயில் நிலையங்களை பயன்படுத்துவர். இந்நிலையில் ரயில் மற்றும் ரயில் நிலையங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டியது நமது கடமை.

மேலும், கூட்ட நெரிசலில் ஒருவரையொருவர் இடித்து தள்ளிக் கொண்டு செல்வது, இருக்கைகளில் மற்ற பயணிகளை உட்காரவிடாமல் தடுப்பது, ஊனமுற்றோர், பெண்கள் இருக்கைகளில் அமர்ந்துகொண்டு அவர்களுக்கு இடம் தர மறுப்பது இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரையும் பிடித்து, அவர்களுக்கும் உரிய அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தன்னார்வ அமைப்பினரும் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரயில் மற்றும் ரயில் நிலையங்களை தூய்மையாக வைத்திருப்பதன் அவசியத்தை பயணிகளுக்கு தன்னார்வ அமைப்பினர் தெரிவிப்பார்கள்.

மேலும் கூட்ட நெரிசலால் ஏற்படும் விபத்துக்களை அவர்களுக்கு வலியுறுத்தி அவர்களுக்கு உரிய உதவிகளையும் தன்னார்வலர்கள் செய்வர்' என்றார் அனுஜ் தயாள்.
dinamani

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "டெல்லி மெட்ரோ:எச்சில துப்பி அசுத்தம் செய்வோரைப் பிடிக்க பறக்கும் படைகள் அறிமுகம்"

கருத்துரையிடுக