3 மே, 2010

ஹைதராபாத்:மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பிற்கும் அபினவ் பாரத்தான் காரணம்

ஜெய்பூர்:மலேகான்,அஜ்மீர் ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு காரணமான ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கமான அபினவ் பாரத் 2007 ஆம் ஆண்டு ஹைதராபாத்தின் புகழ்பெற்ற மக்கா மஸ்ஜிதில் நடைபெற்ற குண்டுவெடிப்பிற்கும் காரணம் என்பது உறுதியாகியுள்ளது.

2007 ஆம் ஆண்டு அஜ்மீர் தர்காவில் நடைபெற்ற குண்டுவெடிப்புடன் தொடர்புடைய குற்றவாளிகளை கைதுச்செய்து ராஜஸ்தான் தீவிரவாத எதிர்ப்பு படை(ஏ.டி.எஸ்) விசாரணைச் செய்த பொழுது இதனைக் குறித்த விபரங்கள் அவர்களிடமிருந்து கிடைத்தன.

2007 ஆம் ஆண்டு மே 18-ஆம் தேதி மக்கா மஸ்ஜிதில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் ஐந்துபேரும், தொடர்ந்து நடந்த போலீசின் அநியாய துப்பாக்கிச் சூட்டிலும் ஒன்பது பேரும் கொல்லப்பட்டனர்.

அஜ்மீர் தர்காவிலும், மக்கா மஸ்ஜிதிலும் குண்டுவெடிப்பை நிகழ்த்த பயன்படுத்திய ’சிம்கார்டுகள்’ ஒரே சீரியலைக் கொண்டவையாகும். ஒரே மாதிரியாகத்தான் இரு இடங்களிலும் அபினவ் பாரத் குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளது என ஏ.டி.எஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

புதிய கண்டறிதலைத் தொடர்ந்து மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பை புலனாய்வுச் செய்யும் சி.பி.ஐ குழு அஜ்மீர், மலேகான் வழக்குகளில் கைதுச் செய்யப்பட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதிகளிடம் விசாரணையை மேற்கொண்டனர்.

டி.ஐ.ஜி அசோக் திவாரியின் தலைமையிலான குழு அஜ்மீர் குண்டுவெடிப்பில் கைதுச் செய்யப்பட்டுள்ள ஹிந்துத்துவா பயங்கரவாதிகளிடம் விசாரணையை மேற்கொள்ள ஜெய்ப்பூர் வந்தடைந்தனர். மற்றொரு குழு நேற்று முன்தினம் ஹிந்துத்துவா பெண் தீவிரவாதி பிரக்யாசிங் தாக்கூர் உள்ளிட்ட மலேகான் குண்டுவெடிப்பு தீவிரவாதிகளிடம் நாசிக்கில் வைத்து விசாரணையை மேற்கொண்டனர்.

சிம்கார்டுகள் தொடர்பாக இரு குண்டு வெடிப்புகளுக்கு இடையேயான தொடர்பைக் குறித்து ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டிருந்தாலும் அன்று ஆதாரங்கள் கிடைக்கவில்லை என விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே அஜ்மீர் குண்டுவெடிப்புத் தொடர்பாக மேலும் ஒருவர் கைதுச்செய்யப்பட்டார்.அபினவ் பாரத் என்ற ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பின் தீவிர உறுப்பினர் விஷ்ணு பிரசாத்தை மத்தியபிரதேச மாநிலம் குர்தானில் வைத்து ராஜஸ்தான் ஏ.டி.எஸ் சனிக்கிழமை கைதுச் செய்தது.

ஏற்கனவே அஜ்மீர் குண்டுவெடிப்பில் தேவேந்திரகுப்தா, சந்திரசேகர் ஆகியோரை போலீசார் கைதுச் செய்திருந்தனர்.சந்திர சேகரின் உறவினர்தான் கைதுச்செய்யப்பட்ட விஷ்ணுபிரசாத். போலீஸ் இவனை விசாரித்து வருகிறது. மற்றொரு குற்றவாளியான குண்டுத் தயாரிப்பதில் வல்லுநரான ஹிந்துத்துவா தீவிரவாதியை அடையாளம் கண்டுள்ளதாக ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் சாந்திதரிவாள் தெரிவித்துள்ளார்.

அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச்செய்யப்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதிகள் தேவேந்திரகுப்தாவும், சந்திரசேகரும் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர்களென்றும், இதர ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்புகளுடன் இவர்களுக்கு தொடர்பு உண்டென்றும் ராஜஸ்தான் ஏ.டி.எஸ் அறிவித்துள்ளது.

ஜார்க்கண்டில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரச்சாரக்காக செயல்படுபவர் தேவேந்திரகுப்தா. குப்தாவும், சுசில் ஜோஷி என்பவரும் இணைந்துதான் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளனர் எனக் கருதப்படுகிறது.

அஜ்மீர் குண்டுவெடிப்பின் சூத்திரதாரியாக கருதப்படும் சுசில் ஜோஷி இந்தூரில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரச்சாரகர் ஆவார். குண்டுவெடிப்பிற்கு பின்னர் இரண்டுமாதம் கழித்து மத்தியபிரதேச மாநிலத்தில் வைத்து இவர் கொல்லப்பட்டார்.

தேவேந்திர குப்தாவுக்கு நார்கோ அனாலிசிஸ் (உண்மைக் கண்டறியும் சோதனை) சோதனைச் செய்ய அனுமதிக்கோரி ராஜஸ்தான் போலீசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இம்மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெறும் என ஏ.டி.எஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹைதராபாத்:மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பிற்கும் அபினவ் பாரத்தான் காரணம்"

கருத்துரையிடுக