15 மே, 2010

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை: எஸ்.ஐ.டி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது

புதுடெல்லி:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் போது கொடூரமான முறையில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரி உள்ளிட்டோர் கொல்லப்பட்ட குல்பர்க் சொஸைட்டி கூட்டுப் படுகொலையில் நரேந்திர மோடியின் பங்குக்குறித்த சிறப்பு புலனாய்வுக் குழுவின்(எஸ்.ஐ.டி) அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.

இவ்வழக்கில் அடுத்த விசாரணை வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறும் பொழுது எஸ்.ஐ.டியின் அறிக்கையின் உறை திறக்கப்படும் என கருதப்படுகிறது.

கடந்த மே மாதம் 5 ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் அடிப்படையில் சீல் செய்யப்பட்ட உறையில் சி.பி.ஐயின் முன்னால் இயக்குநரும் தற்போதைய எஸ்.ஐ.டியின் தலைவருமான ஆர்.கே.ராகவன் அறிக்கையை சமர்ப்பித்தார்.

வி.ஹெச்.பியின் பிரவீன் தொகாடியாவை விசாரணை செய்ய வேண்டியுள்ளதால் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்தர எஸ்.ஐ.டி கோரியிருந்தது.

தொகாடியாவை கடந்த வாரம் விசாரணைச் செய்தது எஸ்.ஐ.டி. மோடியையும், இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி அளித்த புகாரில் கூறப்பட்டிருந்த இதர அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களையும் எஸ்.ஐ.டி ஏற்கனவே விசாரித்திருந்தது.

2009 ஏப்ரல் 27 ஆம் தேதி ஜாகியா ஜாஃப்ரியின் புகாரைத் தொடர்ந்து புலனாய்வு விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. 2002இல் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் போது குல்பர்க் சொஸைட்டியில் இஹ்ஸான் ஜாஃப்ரி உள்ளிட்ட 68 பேர் கொடூரமான கொல்லப்பட்டதில் மோடிக்கும் பா.ஜ.க அமைச்சர்களுக்கும் பங்குண்டு என ஜாகியா ஜாஃப்ரி தனது புகாரில் கூறியிருந்தார்.

குல்பர்க் ஸொஸைட்டியில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் வெறியாட்டத்தின் போது ஜாஃப்ரி பல முறை மோடியையும், போலீஸ் அதிகாரிகளையும் தொடர்புக் கொண்டபொழுது எவரும் செவிசாய்க்கவில்லை. எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மோடியை எஸ்.ஐ.டி ஒன்பது மணிநேரத்திற்கும் மேலாக விசாரணைச் செய்திருந்தது. முன்னாள் உள்துறை துனை அமைச்சர் கோர்தன் ஸதாஃபியா, பா.ஜ.க தலைவர் எ.கே.ஜடேஜா, முன் பா.ஜ.க எம்.எல்.ஏ காலு மலிவாத், எம்.எல்.ஏ அனில் பட்டேல், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஆர்.பி.ஸ்ரீகுமார் உள்ளிட்டோரையும் எஸ்.ஐ.டி விசாரணைச் செய்திருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை: எஸ்.ஐ.டி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது"

கருத்துரையிடுக