30 மே, 2010

தங்களது சம்பளத்தை அடுத்தவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதில்லை: ஆய்வில் தகவல்

தங்களது வருமானத்தை அடுத்தவர்களின் வருமானத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதில்லை என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

பாரீஸ் பொருளாதாரப் பள்ளியின் சார்பில் 24 ஐரோப்பிய நாடுகளில் 19 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு முடிவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தங்களது சம்பளத்தை நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சம்பளத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பவர்களே அதிகம் உள்ளனர். ஆண், பெண் என்ற பேதமின்றி இருபாலருமே இது போன்று ஒப்பிட்டுப் பார்ப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.

பணக்கார நாடுகளை விட ஏழை நாடுகளில் உள்ள மக்களே இது போல் ஒப்பிட்டுப் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை தலைமையேற்று நடத்திய பேராசிரியர் ஆன்ட்ரூ கிளார்க் என்பவர் கூறுகையில், "இது போல தங்களது வருமானத்தை மற்றவர்களின் வருமானத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பதால் மகிழ்ச்சி குறைந்து விகுகிறது. சமச்சீர் அற்று இருப்பதாக ஒரு உணர்வு ஏற்பட்டு விடும். என்னைப் பொறுத்த வரை ஏழை மக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளுக்காக மட்டும் தான் சம்பாதிக்க நினைக்கின்றனர். ஆனால் பணக்காரர்கள் தான் திருப்தி அடையாமல், அடுத்தவர்களுடன் ஒப்பிட்டு மேலும் மேலும் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பதாக நான் கருதுகிறேன்" என்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்த லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தின் மேலாண்மைத் துறை பேராசிரியரும் நிறுவன உளவியல் நிபுணருமான காரி கூப்பர், "ஒப்பிட்டுப் பார்ப்பது மிகவும் ஆபத்தானது. அளவுக்கு அதிகமாக இவ்வாறு செய்வதால் எதிலுமே திருப்தி இல்லாமல் போய்விடும். வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைந்துவிடும்" என்றார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "தங்களது சம்பளத்தை அடுத்தவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதில்லை: ஆய்வில் தகவல்"

பெயரில்லா சொன்னது…

it's true

கருத்துரையிடுக