புதுடெல்லி:நடுத்தர வருமான நாடுகளில் அன்னையரின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் இந்தியா பின்தங்கிய நிலையில் உள்ளதாக குழந்தைகளின் உரிமைகளுக்காக பாடுபடும் ’சேவ் த சில்ட்ரன்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறுகிறது.
அன்னையராக வாழ மிகவும் பாதுகாப்பான 77 நாடுகளின் பட்டியலில் இந்தியா 73-வது இடத்தை வகிக்கிறது.
’உலகில் அன்னையரின் நிலை-2010’ என்ற அறிக்கையில் 166 நாடுகள் குறித்து பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு போராலும், பட்டினியாலும் வாடும் காங்கோ, கென்யா ஆகிய ஆப்ரிக்க நாடுகளை விடவும் மிகவும் பின்தங்கிய நிலையில் இந்தியா உள்ளது.
வளர்ச்சியடைந்த நாடுகளில் நார்வே முதலிடத்தை வகிக்கிறது. வளரும் நாடுகளில் கியூபா அன்னையருக்கு ஏற்ற இடமாக உள்ளது.
ஆஃப்கானிஸ்தானில் ஒவ்வொரு மணித்தியாலத்திலும் 4 குழந்தைகள் இறக்கின்றன. இது 5 வயது அடையும் முன்பாகும். 57 நாடுகளில் சுகாதாரப் பணியாளர்கள் மிகவும் குறைவாக உள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "அன்னையர் பாதுகாப்பில் மிகவும் பின்தங்கிய நிலையில் இந்தியா"
கருத்துரையிடுக