ஜெய்பூர்:ராஜஸ்தான் தீவிரவாத எதிர்ப்புப்படையான(ATS) அஜ்மீர் தர்காவில் கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்புடன் தொடர்புடைய ஹிந்து தீவிரவாத இயக்கமான சனாதன் சன்ஸ்தானின் உறுப்பினர்கள் இருவரை கடந்த புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமையன்று கைதுச் செய்திருந்தது.
இதுத்தொடர்பாக ஏ.டி.எஸ் அதிகாரியொருவர் கூறுகையில், "இவ்வழக்கில் மேலும் கைதுகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குப்தா முதன்மை மாஜிஸ்திரேட் முன்னர் ஆஜர்படுத்தப்பட்டு 12 நாள்கள் போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஜெய்ப்பூருக்கு மேலதிக விசாரணைக்கு கொண்டு செல்லப்படுவார்.
எங்களிடம் இன்னும் சிலரின் பட்டியல் உள்ளது. வரும் நாட்களில் கைதுகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். எங்களது புலனாய்வு வேறுமாநிலங்களிலும் விரிவுப்படுத்தப்படும். இக்குண்டுவெடிப்பை நடத்தியவர்கள் ஹிந்து வலதுசாரி இயக்கத்தைச் சார்ந்தவர்கள். இவர்களின் நோக்கம் தீவிரவாதத்தை தூண்டுவதாகும்." என்றவர் அந்த இயக்கத்தின் பெயரை வெளியிடவில்லை.
செய்தி:twocircles.net
0 கருத்துகள்: on "அஜ்மீர் குண்டுவெடிப்பு:மேலும் கைதுகள் தொடரலாம்- ஏ.டி.எஸ்"
கருத்துரையிடுக