23 மே, 2010

'டெஹ்ரான் தலைவர்களை கொல்ல நாடியவர்கள் –யு.எஸ் அல்லது இஸ்ரேல் நாடுகளின் உளவாளிகளாக இருக்கலாம்'- ரிகி

மொராக்கோவில் இருந்தபோது பல டெஹ்ரான் தலைவர்களை கொல்ல நாடியவர்கள் –யு.எஸ் அல்லது இஸ்ரேல் நாடுகளின் உளவாளிகளாக இருக்கலாம் என்று தான் சந்தேகிப்பதாக கைது செய்யப்பட்டுள்ள ஜுந்துல்லா தலைவர் அப்துல் மாலிக் ரிகி தெரிவித்துள்ளார்.

பிரஸ் டிவிக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, தான் கைது செய்யப்படுவதற்கு முன் NATO அதிகாரிகள் என்று தங்களை கூறிக்கொண்டு வந்தவர்களிடம் காஸாபிளாங்காவில் வைத்து பல சந்திப்புகள் நடத்தியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், பழைய சந்திப்புகளை நினைவு கூர்ந்தால், எனக்கு இரண்டு விஷயங்கள் புரியவில்லை.

ஒன்று, இவர்கள் NATO அதிகாரிகளாக இருந்திருந்தால் என்னை ஆப்கானில் சந்திப்பதை தவிர்த்துவிட்டு இங்கு ஏன் சந்தித்தார்கள். ஏனென்றால் ஆப்கானில் மிக சுலபமாக சந்திக்கலாம், அங்கு அவர்களுக்கு படைகளும் உண்டு.

இரண்டாவதாக, முதல் தடவை அவர்கள் NATO அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு எங்களை சந்திக்கையில், அவர்கள் என்னிடம் ஈரானின் கிழக்குப்பகுதிகளை பற்றித்தான் பேசுவார்கள் என்று நினைத்தோம் ஏனெனில் ஈரானின் கிழக்குப்பகுதியின் அருகிலிலுள்ள ஆப்கானில்தான் அவர்கள் முகாமிட்டுள்ளனர்.ஆனால், அவர்கள் எங்கள் பணிகளை கிழக்கு ஈரானிலிருந்து தெஹ்ரானிற்கு மாற்றுமாறு கூறினர். இது எங்களுக்கு புதிராகத் தோன்றியது.

பின்னர் அனைத்துமே சார்பார்க்கும் போதுதான் விளங்கியது இவர்கள் நேட்டோ படையின்கீழ் இயங்கும் யு.எஸ்., இஸ்ரேல் உளவாளிகள் என்று! இவ்வாறு அவர் தெரிவித்தார்.

துபாயிலிருந்து கிர்கிஸ்தான் செல்லும் வழியில், கடந்த பிப்ரவரி மாதம் ஜுந்துல்லா தலைவர் அப்துல் மாலிக் ரிகி ஈரான் பாதுகாப்பு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.

கடந்த பல ஆண்டுகளில், ஈரானில் நடத்தப்பட்ட பல்வேறு குண்டுவெடிப்புகளை தன் இயக்கம் தான் முன்னின்று நடத்தியதாக ரிகி ஒப்புகொண்டார்.

தான் செய்த அனைத்து தீவிரவாத செயல்களுக்கும், மேற்கத்திய நாடுகள் ஆதரவு அளித்ததாக ரிகி முன்னதாக நடந்த விசாரணையில் வாக்குமூலம் அளித்தார்.
source:presstv

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "'டெஹ்ரான் தலைவர்களை கொல்ல நாடியவர்கள் –யு.எஸ் அல்லது இஸ்ரேல் நாடுகளின் உளவாளிகளாக இருக்கலாம்'- ரிகி"

கருத்துரையிடுக