லண்டன்:இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இறந்து விட்டதாக நகைச்சுவையாக அறிவித்த தொகுப்பாளரை (ரேடியோ ஜாக்கி) பிபிசி பணியிடை நீக்கம் செய்துள்ளது.
பிபிசி வானொலியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருப்பவர் டேன்னி கெல்லி(39). பிபிசி வானொலியில் திங்கள்கிழமை ஒளிபரப்பான நேரடி நிகழ்ச்சி (லைவ் புரோகிராம்) ஒன்றின் இடையே தற்போது முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாகக் கூறிவிட்டு இங்கிலாந்து நாட்டின் தேசிய கீதத்தை ஒலிக்கச் செய்தார். அதன் பின்னர் எலிசபெத் ராணி இறந்து விட்டதாக அறிவித்தார்.
அவர் நகைச்சுவைக்காகவே இவ்வாறு செய்தார். இருந்தாலும் ராணி இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதால் பரபரப்பும், எதிர்ப்புகளும் கிளம்பின. இதையடுத்து சில மணிநேரங்களிலேயே பிபிசி நிறுவனம் தனது ஒலிபரப்புக்காக மன்னிப்பு கேட்டது.
மேலும் நகைச்சுவை என்ற பேரில் தேவையில்லாமல் ராணி இறந்து விட்டதாக அறிவித்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் கெல்லியை பிபிசி பணியிடை நீக்கம் செய்துள்ளது. அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வரை கெல்லி பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக பிபிசி அறிவித்துள்ளது.
இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள கெல்லி கடந்த 10 ஆண்டுகளாக பிபிசி வானொலியில் அறிவிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதையடுத்து இந்தவாரம் செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பான நிகழ்ச்சியில் கெல்லி தொகுத்து வழங்க வேண்டிய நிகழ்ச்சியை மொல்லி கிரீன் என்பவர் தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியின் துவக்கத்தில் கீரீன் கூறுகையில், "வானொலி நிகழ்ச்சியின் போது கெல்லி, தேவையில்லாமல் எலிசபெத் ராணி இறந்து விட்டதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்திவிட்டார். இந்த விவகாரத்தை பிபிசி நிறுவனம் மிகவும் கடுமாயாக எடுத்துக் கொண்டு அவர் மீது நடவடிக்கையும் எடுத்துள்ளது. மேலும் கெல்லியின் அறிவிப்புக்கு பிபிசி நிறுவனம் மன்னிப்புக் கோருகிறது" என்றார்.

source:dinamani

0 கருத்துகள்: on "எலிசபெத் ராணி இறந்ததாக அறிவித்த விவகாரம்: தொகுப்பாளரை சஸ்பெண்ட் செய்தது பிபிசி"
கருத்துரையிடுக