20 மே, 2010

லைலா புயலின் சீற்றம்:கன மழையால் வட தமிழகம் பாதிப்பு

லைலா புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.​ சென்னையில் புதன்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 108 மி.மீ.​ மழை பதிவானது.​ ​

சென்னை அருகே வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள லைலா புயல்,​​வியாழக்கிழமை மதியம் ஆந்திர கடற்கரை அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் கரையைக் கடக்கும்போது,​​ வடக்கு தமிழக கடற்கரை பகுதியில் அதிகபட்சமாக 60கி.மீ.​ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை உள்பட பல நகரங்களில் சாலைகளில் வெள்ளம் புகுந்ததோடு,​​ மரங்களும் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.​ சூறாவளிக் காற்று காரணமாக கடற்கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான மீன்பிடி படகுகள் கடும் சேதம் அடைந்ததால்,​​ மீனவர்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

வங்கக் கடலில் சென்னைக்கு அருகில் நிலைகொண்டுள்ள புயல் காரணமாக,​​ சென்னை உள்பட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் மழை பெய்து வருகிறது.​ மேலும் இரண்டு தினங்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.தொடர் மழைக்கு சென்னை உள்பட தமிழகத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.​

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "லைலா புயலின் சீற்றம்:கன மழையால் வட தமிழகம் பாதிப்பு"

கருத்துரையிடுக