11 மே, 2010

'இந்​து​வாக இருப்​பதே குற்​றமா'- வி.ஹெச்.பி பயங்கரவாதத் தலைவர்

காந்​தி ​ந​கர்:குஜ​ராத்தில் நடந்த மதக் கலவரங்கள் தொடர்​பாக சிறப்பு விசா​ர​ணைக் குழு ​(எஸ்​ஐடி)​ முன் ஆஜரான விஸ்வ ஹிந்து பரி​ஷத் சர்வதேசத் தலைவர் பிர​வீண் தொகா​டியாவிடம் 4 மணி நேரம் விசாரணை நடந்தது.

கு​ஜ​ராத் மாநி​லத்​தில் 2002ம் நடந்த மதக் கலவரத்தில் ஏராளமான அப்பாவி முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்.

இதுத் தொடர்பாக குஜராத் அரசு நடத்திய விசாரணைகளில் உண்மைகள் மறைக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் சிறப்பு புலனாய்வு விசாரணைக் குழுவை அமைத்தது.

இந்தக் குழு கடந்த மார்ச் மாதம் குஜ​ராத் முதல்​வர் நரேந்​திர மோடியிடம் விசா​ரணை நடத்​தி​யது.​

அதே போல பிர​வீண் தொகா​டி​யா​வுக்கும் சிறப்பு புலனாய்வு விசாரணைக் குழு சம்​மன் அனுப்பியது. ஆனால், அவர் ஆஜ​ரா​காமல் இருந்து வந்தார். இந் நிலையில் நேற்று விசாரணைக் குழு முன் ஆஜ​ரா​னார்.​

அகம​தா​பா​த்தி​லுள்ள மகா​லட்​சுமி கோயி​லிலும் காந்திநகர் பஞ்​ச​தேவ கோயி​லிலும்,​ தரி​ச​னம் செய்துவிட்டு காந்​தி​ந​கர் பழைய தலை​மைச் செய​லக அலு​வ​லக வளா​கத்​தி​லுள்ள எஸ்​ஐடி அலு​வ​ல​கத்​துக்கு 100 விஎச்பி தொண்​டர்​க​ள்,​​ சாதுக்​க​ளுடன் தொகாடியா வந்​தானர்.

அவருடன் வந்தவர்கள் அலு​வ​ல​கத்​துக்கு வெளியே அவர்​கள் ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்தை எழுப்​பி​னர்.

அப்போது நிரு​பர்​க​ளி​டம் பேசிய தொகா​டியா; 'என் மீது என்ன புகார் கொடுத்​தி​ருக்​கி​றார்​கள் என்று தெரி​ய​வில்லை.​ புகார் நக​லை​யும் அதிகா​ரி​கள் என்​னி​டம் தர​வில்லை.​ உச்ச நீதி​மன்ற உத்​த​ர​வுக்​குக் கட்டுப்​பட்டு நான் விசா​ர​ணைக் குழு முன்பு ஆஜ​ராக வந்​தி​ருக்​கி​றேன்.' என்​றார்.​

பின்னர் அவர் உள்ளே சென்றார். இதையடுத்து அவருடன் வந்த ஆதரவாளர்கள் அலு​வ​ல​கத்​துக்கு எதி​ரே​ உள்ள புல்​வெ​ளி​யில் அமர்ந்து பஜ​னைப் பாடல்​களை பாட ஆரம்பித்தனர்.

சுமார் 4 மணி நேரம் தொகாடியாவிடம் விசாரணை நடந்தது. சிபிஐ முன்​னாள் டிஐஜி ஏ.கே.​ மல்​ஹோத்ரா, அவரிடம் விசா​ர​ணை நடத்தினார்.​

விசாரணை முடிந்து வெளியே வந்த தொகா​டியா நிரு​பர்​க​ளி​டம் பேசுகையில், 'இந்த நாட்​டில் இந்​து​வாக இருப்​பதே குற்​றம்​தான் போலி​ருக்​கி​றது.​ என்​னைத் தூக்​கில் போடு​வ​தற்​கா​கத்​தான் எஸ்​ஐடி உரு​வாக்​கப்​பட்​டது போலும்.​ ஒரு​வேளை என் பெயர் ஹு​சைன் என்று இருந்​தால் என்னை அவர்​கள் விசா​ரிக்​கா​மல் விட்​டி​ருப்​பார்​கள்.​நான் இந்து என்ற கார​ணத்​தால்​தான் என்னை எஸ்​ஐடி போலீ​ஸார் விசா​ர​ணைக்கு அழைத்​துள்​ள​னர்.​

கு​ஜ​ராத் மாநி​லத்​தில் எந்த ஒரு இந்​துக்​கும் பாது​காப்​பில்லை.​ புனி​தப் போர் என்று சொல்​லிக் கொண்டு இந்​தியா மீது ஜிஹா​தி​கள் தாக்​கு​தல் நடத்தி வரு​கின்​ற​னர்.​ இந்​துக்​கள்,​​ சாதுக்​கள்,​​ கோயில்​கள்,​​ கோயில் சார்ந்த அமைப்​பு​கள் மீது அவர்​கள் தாக்​கு​த​லைத் தொடுத்து வருகின்றனர்.​

க​ல​வ​ரம் நடப்​ப​தற்கு ஓராண்​டுக்கு முன்பு ஏற்​பாடு செய்​யப்​பட்ட கூட்​டங்​க​ளில் என்ன பேசி​னீர்​கள் என்று விசா​ர​ணை​யின்​போது கேட்​ட​னர்.​ கல​வ​ரத்​தின்​போது நான் ஏன் குஜ​ராத்​தில் இருந்​தேன்?​ யார் யாரி​டம் பேசி​னேன் என்​றும் விசாரித்தனர்.

நான் ஒரு இந்து.​ குஜ​ராத்​தில் இருப்​ப​தற்கு எனக்கு உரிமை உள்​ளது.​ எனக்கு நாட்​டி​லுள்ள 82 கோடி இந்து மக்​க​ளைத் தெரி​யும்.​ யார்?​ யாரி​டம் பேசி​னேன் என்​ப​தற்கு யார் பெய​ரைச் சொல்​வது என்று அவ​ரி​டம் திருப்​பிக் கேட்​டேன்' என்​றார் தொகாடியா.
source:Thatstamil

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "'இந்​து​வாக இருப்​பதே குற்​றமா'- வி.ஹெச்.பி பயங்கரவாதத் தலைவர்"

அப்துல் பாஸித் சொன்னது…

அட! தொகாடியாவுக்கு நகைச்சுவை கூட நன்றாக வருகிறதே? முஸ்லீம்கள் சொல்ல வேண்டியதையெல்லாம் அவர் சொல்கிறார். முஸ்லீம்களாய் பிறந்த ஒரே காரணத்திற்காகத் தானே ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்களை கொன்றார்கள்?

//புனி​தப் போர் என்று சொல்​லிக் கொண்டு இந்​தியா மீது ஜிஹா​தி​கள் தாக்​கு​தல் நடத்தி வரு​கின்​ற​னர்.​ //
அப்படி ஒரு மாயையை உருவாக்குவதற்கு தான் அவர்கள் முயல்கிரார்கள். மாலேகான், அஜ்மீர் இன்னும் பல குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது ஹிந்து தீவிரவாதிகளே!

கருத்துரையிடுக