14 மே, 2010

இங்கிலாந்து வரலாற்றில் முதன்முறையாக அமைச்சரவையில் முஸ்லீம் பெண் அமைச்சர்

இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தனிப்பெரும் கட்சியாக விளங்கும் கன்சர்வேடிவ் கட்சி, 3வது இடத்தைப் பிடித்த லிபரல் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.

கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரான டேவிட் கேமரூன் பிரதமராக பதவி ஏற்றுள்ளார். இதையடுத்து புதிய அமைச்சரவையை அவர் அறிவித்துள்ளார்.

அமைச்சரவையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் இடம் தரப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவரான பரோனஸ் சயீதா வர்சி(39) அந் நாட்டு அமைச்சராகிறார்.

இவரது தந்தை பாகிஸ்தானில் இருந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தவர். வழக்கறிஞரான சயீதா வர்சி, கன்சர்வேடிவ் கட்சியின் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். கேமரூன் அமைச்சரவையில் இவர் இலாகா இல்லாத கேபினட் அமைச்சராக இருப்பார்.

இங்கிலாந்தில் முஸ்லிம் பெண் ஒருவர் அமைச்சரானது இதுவே முதல் முறையாகும். அந்நாட்டில் 72 ஆண்டுகளுக்குப் பின் கூட்டணி அரசு பதவியேற்பதும் இதுவே முதல் முறை.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இங்கிலாந்து வரலாற்றில் முதன்முறையாக அமைச்சரவையில் முஸ்லீம் பெண் அமைச்சர்"

கருத்துரையிடுக